எங்கே வந்து நிக்குது பாருங்க.. ஹோலி கலர் பூச பிடிக்காதவங்க நாட்டை விட்டு வெளியேறுங்க: உ.பி அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாப்பட்டு வரும் நிலையில், உத்தரப்பிரதேசத்தில் அமைச்சர் சஞ்சய் நிஷாத், "வண்ணங்களை எதிர்ப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்." என்று சிறுபான்மை மக்களை தாக்கி பேசியுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

நாடு முழுவதும் ஹோலி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் இந்த பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வண்ணங்கள்.. திருவிழா என்று மக்கள் உச்சபட்ச மகிழ்ச்சியில் இந்த பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். மதக்கலவரம் அதிகம் நடைபெறும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆங்காங்கே பதற்றமும் நிலவி வருகிறது.

Holy Sanjay Nishad

அங்கு சிறுபான்மை மக்கள் அதிகளவு வசித்து வருகிறார்கள். ஹோலி கொண்டாட்டத்தின் போது சாலைகளில் உள்ள மசூதிகளில் வண்ணப் பொடி மற்றும் சாயக்கலவை படுவதற்கு வாய்ப்புள்ளது. கடந்த காலங்களில் ஏற்பட்ட அனுபவத்திலும்.. கலவரத்தை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உத்தரப்பிரதேசத்தின் முக்கிய நகரங்களான கான்பூர், பரேலி, சம்பல், அலிகர், மொரடாபாத் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மசூதிகள் தார்பாய்கள் மூலம் மூடப்பட்டுள்ளன.

இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் உத்தரப்பிரதேசம் மாநில மீன்வளத்துறை அமைச்சரும், பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள நிஷாத் கட்சி தலைவருமான சஞ்சய் நிஷாத் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையாகியுள்ளது. இதுகுறித்து சஞ்சய் நிஷாத் கோரக்பூரில் நடைபெற்ற ஹோலி பண்டிகையில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் கூறுகையில், "வெள்ளக்கிழமை தொழுகையின்போது ஒருவரையொருவர் கட்டித் தழுவுவார்கள். அதையேதான் ஹோலி பண்டிகையின்போதும் செய்கிறோம். இரண்டுமே ஒற்றுமையை வலியுறுத்தும் நிகழ்வுதான். ஆனாலும் சில அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஒற்றுமை பிடிப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட மக்களின் மனதில் நஞ்சை கலக்கி தவறாக வழிநடத்தும் செயலில் சிலர் ஈடுபடுகிறார்கள். அவர்களும் நம் நாட்டு குடிமகன்கள் என்பது வேதனையளிக்கிறது.

அவர்களுக்கு வண்ணங்களில் ஏதாவது பிரச்னை இருந்தால் நான்கு சுவர்களுக்குள் முடங்க கூடாது. அவர்கள் நாட்டை விட்டே வெளியேற வேண்டும். எதிர்க்கட்சி சமூகத்தில் பிளவை ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர். ஹோலி என்பது மகிழ்ச்சியின் பண்டிகை. எதிர்க்கட்சிகள் இதிலும் அரசியல் செய்கின்றன. நாங்கள் மக்கள் நலனுக்காக செயல்படுகிறோம். இப்படிதான் தேசிய ஜனநாயக கூட்டணி ஜனநாயகத்தை நிலை நிறுத்தும்." என்று கூறியுள்ளார்.

சஞ்சய் நிஷாத்தின் இந்த கருத்துக்கு சமாஜ்வாடி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் விஜய் வதிதீவார் கூறுகையில், "எதையுமே சாதிக்க முடியாதவர்கள் தான் இப்படி அர்த்தமற்ற வாதத்தை முன்வைப்பார்கள்." என்று விமர்சித்துள்ளார்.

அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தேசிய தலைவர் மவுலானா சஹாபுதின் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், "சஞ்சய் நிஷார் அமைச்சராக பதவி பிரமாணம் எடுத்தபோது.. வண்ணங்கள் வேண்டாம் என்பவர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம் என்று சொல்லி பதவி ஏற்கவில்லை. சமூகத்தில் பிரிவினை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவிக்க யாருக்கும் உரிமை இல்லை. இது அமைச்சருக்கும் பொருந்தும்." என்று கூறியுள்ளார்.

சஞ்சய் நிஷாத் இப்படி பேசுவது இது முதல்முறை இல்லை. கடந்த 2022 ஆம் ஆண்டு கன்னட நடிகர் சுதீப், 'இந்தி தேசிய மொழி இல்லை.' என்று கூறியதற்கு, 'இந்தி பேச முடியாது என்றால் வெளிநாட்டுக்கு செல்லலாம்.' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அமைச்சராக இருந்து கொண்டு பொறுப்பற்ற முறையில் கருத்துகளை வெளிப்படுத்தும் அவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+