உ.பி: அகிலேஷுடன் பீம் ஆர்மி சந்திரசேகர் ஆசாத் சந்திப்பு- பாஜக கூட்டணி எம்.எல்.ஏக்கள் 2 பேர் ராஜினாமா
லக்னோ: உத்தரப்பிரதேச அரசியலில் அதிரடி திருப்பங்கள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. தலித் தலைவரான பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர ஆசாத், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவை இன்று சந்தித்து பேசினார். மேலும் பாஜகவின் கூட்டணி கட்சியான அப்னா தள்(எஸ்)-ன் 2 எம்.எல்.ஏக்கள் திடீரென ராஜினாமா செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் கடந்த 48 மணி நேரமாக பரபரப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. உ.பி.யில் ஆளும் பாஜக அரசில் இருந்து இதுவரை 3 அமைச்சர்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு அகிலேஷின் சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளனர். இதேபோல் 7 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததுடன் பாஜகவை விட்டு வெளியேறிவிட்டனர். கடந்த 48 மணிநேரத்தில் பாஜக 10 எம்.எல்.ஏக்களை இழந்திருக்கிறது.
பாஜகவின் வாக்கு வங்கிகளாக இருந்த இதர பிற்படுத்தப்பட்ட, தலித் சமூகத் தலைவர்கள் வெளியேறி அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியில் ஐக்கியமாகி வருகின்றனர். இது ஆளும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் உ.பி. அரசியலில் மற்றொரு திருப்பம் நிகழ்ந்துள்ளது.

பீம் ஆர்மி சந்திரசேகர்
தலித்துகள் அமைப்பான பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் இன்று லக்னோவில் அகிலேஷ் யாதவை சச்தித்து பேசினார். எஸ்.பி.எஸ்.பியின் தலைவர் ஓம்பிரகாஷ் ராஜ்பார் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஜாட்களின் ஆர்.எல்.டி, ராஜ்பார்களின் எஸ்.பி.பி.பி கட்சிகளுடன் சமாஜ்வாதி கட்சி கூட்டணி வைத்துள்ளது. மவுரியாக்கள், நோனியாக்கள் என இதர பிற்படுத்தப்பட்ட ஜாதிகளின் தலைவர்கள் சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளனர்.

அகிலேஷுடன் கூட்டணி
இந்நிலையில் தலித்துகளிடம் செல்வாக்கு மிக்க இளம் தலைவராக திகழும் சந்திரசேகர் ஆசாத், அகிலேஷ் யாதவை சந்தித்து பேசியுள்ளார். தலித்துகளின் வாக்குகள் ஒருகாலத்தில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு கிடைத்தன. ஆனால் அடுத்தடுத்த தேர்தல்களில் தலித்துகளின் நம்பிக்கையை மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி இழந்தது. இப்போதைய தேர்தலிலும் கூட மாயாவதி எங்கே இருக்கிறார் என தெரியாமல்தான் இருக்கிறார். இந்த இடைவெளியில்தான் தலித்துகளின் இளம் தலைவராக பீம் ஆர்மி சந்திரசேகர் ஆசாத் உருவெடுத்தார். இப்போது சந்திரசேகர் ஆசாத்தும் அகிலேஷுடன் கை கோர்க்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

தொகுதி பங்கீடு வேட்பாளர்கள் அறிவிப்பு
மேலும் ஜாட்களின் ஆர்.எல்.டி (ராஷ்டிரிய லோக் தள்) கட்சியும் சமாஜ்வாதி கட்சியும் இன்று முதல் கட்ட வேட்பாளர்களை அறிவித்துள்ளன. சமாஜ்வாதி கட்சி 29 வேட்பாளர்களையும் ஆர்.எல்.டி. 10 வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் பேரன் ஜெயந்த் சவுத்ரிதான் ஆர்.எல்.டி. தலைவர். ஜெயந்த் சவுத்ரியின் தந்தை நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்கிய அஜித்சிங்.

பாஜக கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் விலகல்
இதனிடையே பாஜகவின் கூட்டணி கட்சியான, மத்திய அமைச்சர் அனுப்பிரியா படேலின் அப்னா தள் கட்சியின் 2 எம்.எல்.ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். மேலும் அந்த கட்சியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளனர். ஆர்.கே.வர்மா, செளதாரி அமர்சிங் ஆகிய எம்.எல்.ஏக்கள்தான் ராஜினாமா செய்துள்ளனர். இவர்கள் இருவரும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியில் இணைய உள்ளனர்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications