உ.பி.: பாஜகவின் மேலும் ஒரு எம்.எல்.ஏ. எஸ்கேப்... அகிலேஷின் கூட்டணி கட்சியில் இணைந்தார்!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரும் எம்.எல்.ஏ.வுமான அவ்தார்சிங் பாதனா அக்கட்சியில் இருந்து விலகி ராஷ்டிரிய லோக்தள் கட்சியில் இணைந்தார்.
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் ஆளும் பாஜகவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர் அமைச்சர்கள் மற்றும் சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள். கடந்த 24 மணிநேரத்தில் 2 அமைச்சர்கள் உட்பட 6 எம்.எல்.ஏக்கள் பாஜகவை விட்டு விலகி சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர்.

குஜ்ஜார் தலைவர்
இதேபோல் குஜ்ஜார் சமூகத்தில் செல்வாக்கு பெற்ற தலைவரான அவ்தார்சிங் பாதனாவும் இன்று எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். மேலும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி கூட்டணி வைத்துள்ள ராஷ்டிரிய லோக் தள் கட்சியில் அவ்தார்சிங் பாதனா இன்று இணைந்தார். ஜெயந்த் சவுத்ரி முன்னிலையில் அவ்தார்சிங் பாதனா, ராஷ்டிரிய லோக் தள் கட்சியில் இணைந்தார்.

பாஜகவுக்கு பின்னடைவு
உ.பி. முசாபர்நகர் மிர்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் அவ்தார்சிங் பாதனா. விவசாய சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டங்களின் போது மத்திய, மாநில அரசுகளின் நிலைப்பாட்டை அவர் கடுமையாக விமர்சித்திருந்தார். மேற்கு உ.பி.யில் பாஜக கடும் பின்னடைவை சந்திக்கும் என கூறப்படுகிறது. ஜாட் சமூகத்தினர் பாஜக மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படும் நிலையில் குஜ்ஜார் சமூகத்தின் மூத்த அரசியல் தலைவர் அக்கட்சியில் இருந்து விலகி இருக்கிறார். இது பாஜகவுக்கு மேலும் பின்னடைவு என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

அகிலேஷ் கட்சியில் ஐக்கியம்
ஏற்கனவே பாஜகவில் இருந்து விலகியவர்கள் அகிலேஷ் யாதவை அடுத்தடுத்து சந்தித்து சமாஜ்வாதி கட்சியில் இணைத்துக் கொண்டனர். உ.பி. தேர்தலில் பாஜக கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் சுமார் 100 இடங்களை இழக்கும் என்கின்றன கருத்து கணிப்புகள். பாஜகவுக்கு பல தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி டஃப் பைட் கொடுக்கும் என்கின்றன அக்கணிப்புகள். இதனை உறுதிப்படுத்தும் வகையில் அடுத்தடுத்து பாஜக சீனியர் தலைவர்கள் அகிலேஷ் யாதவ் பக்கம் சாய்ந்து வருகின்றனர்.

7 கட்ட தேர்தல்
உ.பி.யில் பிப்ரவரி 10-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 10-ந் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. மேற்கு உத்தரப்பிரதேச மாநில தொகுதிகளில் பிப்ரவரி 10-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications