இந்த ஒய்யார டீச்சருக்கு மழைநீரில் கால்படவே கூடாதாம்.. மாணவர்களை "பாலம்" கட்ட வைத்ததால் சர்ச்சை
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பள்ளியை சூழ்ந்துள்ள மழைநீரில் நடக்காமல் வரிசையாக நாற்காலிகளை போட்டு அதன் மீது ஏறி ஆசிரியை ஒருவர் நடக்கும் வீடியோ தீயாய் பரவி வருகிறது. இந்த நாற்காலிகளை மழை நீரில் நின்று மாணவர்கள் பிடித்து கொள்ளும் அவலமும் நடந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வந்தது. இதனால் அங்குள்ள பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து கொண்டது.
தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கிவிட்டது. மேலும் மதுராவில் உள்ள ஒரு பள்ளியில் வெள்ள நீர் சூழ்ந்து கொண்டது. அந்த பள்ளி வளாகத்தை சுற்றியுள்ள மைதானத்தில் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

பள்ளி
இந்த நிலையில் அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை ஒருவர் பள்ளிக்கு வந்தார். அப்போது பள்ளியை சுற்றிலும் மழை நீர் கெண்டைகால்அளவுக்கு இருப்பதை கண்டார். இதனால் எப்படி பள்ளிக்கு உள்ளே செல்வது என யோசித்தார். அப்போது அங்கு படிக்கும் மாணவர்களை பள்ளி வாசலில் இருந்து அழைத்தார்.

மழை
அவர்களிடம் மழையால் என்னால் உள்ளே வர முடியாது. அதற்கு நீங்கள்தான் உதவி செய்யணும் என கூறினார். அதற்கு மாணவர்கள் என்ன செய்ய வேண்டும் டீச்சர் என கேட்டதற்கு, உள்ளே இருந்து ஏராளமான நாற்காலிகளை கொண்டு வாருங்கள், வரிசையாக வகுப்பு முதல் வாயில் வரை போடுங்கள் என உத்தரவிட்டார்.

மாணவர்கள், நாற்காலிகள்
மாணவர்களும் நாற்காலிகளை தூக்கிக் கொண்டு மழை நீரில் கால் வைத்தபடியே நாற்காலிகளை போட்டனர். அப்போது கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு ஒய்யாரமாக அந்த நாற்காலியில் ஏறி ஒவ்வொரு நாற்காலியாக தாவினார். அப்போது மாணவர்களை, நான் விழுந்துட போறேன், நாற்காலியை பிடியுங்கள் என கூறியுள்ளார்.
Recommended Video

நாற்காலியை பிடித்துக் கொண்ட மாணவர்கள்
அதற்கேற்ப மாணவர்களும் நாற்காலியை பிடித்துக் கொள்ள அந்த ஆசிரியை மழை நீரில் கால் படாமல், பிள்ளைகள் கால் மழை நீரில் நனைவது குறித்து கவலைப்படாமல் வகுப்பறைக்கு வந்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தை பார்த்து பதறிய ஆசிரியர் ஒருவர் உடனே வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுவிட்டார். இது கல்வித் துறையின் கண்களுக்கு தென்பட்டது. இதையடுத்து அந்த ஒய்யார ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அண்மையில் ஒரு பள்ளியில் ஆசிரியர் தூங்க அவருக்கு மாணவர்கள் விசிறிவிடும் காட்சிகளும் சர்ச்சையை கிளப்பின.
-
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications