உ.பி: யோகி ஆதித்யநாத்துக்கு ரூ1.54 கோடி சொத்து; துப்பாக்கிகளும் வெச்சிருக்காராம்!
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முதல்வர் யோகி ஆதித்ய்நாத்துக்கு ரூ1.54 கோடி சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். மேலும் கைத்துப்பாக்கி, ரிவால்வர் ஆகியவையும் தம்மிடம் இருப்பதாக வேட்புமனுவில் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கு பிப்ரவரி 10-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றே கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
முதல் முறையாக சட்டசபை தேர்தலில் களம் காணுகிறார் முதலர் யோகி ஆதித்யநாத். லோக்சபா எம்.பி.யாக பல முறை வெற்றி பெற்ற யோகி ஆதித்யநாத் உ.பி. சட்ட மேலவை உறுப்பினராக இருந்து வருகிறார். இதுவரை அவர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டதும் இல்லை. தற்போது கோரக்பூர் நகர்ப்புறம் தொகுதியில் யோகி ஆதித்யநாத் போட்டியிடுகிறார்.

6-வது கட்ட தேர்தல்
இத்தொகுதியில் போட்டியிடும் யோகி ஆதித்யநாத், இன்று தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இத்தொகுதிக்கு 6-வது கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. உ.பி.-யில் மார்ச் 3-ந் தேதி 6-ம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

சொத்து மதிப்பு
யோகி ஆதித்யநாத் தமது வேட்புமனுவில் கூறியிருப்பதாவது: ரூ1,54,94,054 மதிப்பிலான சொத்துகள் இருக்கின்றன. 6 வங்கி கணக்குகள் உள்ளன. ரூ12,000 மதிப்பிலான சாம்சங் செல்போன் உள்ளது. ரூ1,00,000 மதிப்பிலான கைத் துப்பாக்கி, ரூ80,000 மதிப்பிலான ரிவால்வர் ஆகியவையும் உள்ளன.

நிலமும் இல்லை வாகனமும் இல்லை
ரூ49,000 மதிப்பிலான 20 கிராம் தங்க நகைகள் உள்ளன. தங்க செயின் உள்ளது. ஆபரணங்களைக் கொண்ட உருத்திராட்ச மாலை உள்ளது. மேலும் 2020-2021-ல் தமது ஆண்டு வருமானம் 13,20,653 என்றும் 2019-20ல் ரூ15,68,799; 2018-19-ல் ரூ 18,27,639; 2017-18-ல் ரூ 14,38,670 ஆண்டு வருமானம் எனவும் யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டுள்ளார். யோகி பெயரில் எந்த விளைநிலமும் இல்லை. அதேபோல் யோகிக்கு சொந்த வாகனமும் இல்லை என அந்த வேட்புமனுவில் கூறப்பட்டுள்ளது.

அகிலேஷும் போட்டி
உ.பி. சட்டசபை தேர்தலில் முதல் முறையாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் போட்டியிடுகிறார். தற்போது லோக்சபா எம்.பி.யாக உள்ளார் அகிலேஷ். முதல்வராக பதவி வகித்த போது எம்.எல்.சியாகவும் இருந்தார் அகிலேஷ். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தேர்தலில் போட்டியிடவில்லை என திட்டவட்டமாக தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications