Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு பக்கம் முஸ்லீம்கள்.. இன்னொரு பக்கம் ஜாட்.. இன்றைய உ.பி தேர்தல் பாஜகவிற்கு ஏன் சவாலானது தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேசத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் மேற்கு உத்தர பிரதேசத்தில் இன்று முதல்கட்ட சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது.

உத்தர பிரதேசத்தில் 58 சட்டசபை தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அங்கு மொத்தம் 7 கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இன்று மொத்தம் 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகிறார்கள்.

முசாபர்நகர், மீரட், பாக்பாட், காசியாபாத், ஷாமிலி, காபூர், கவுதம் புத் நகர், பூலாந்சார், அலிகார்க், ஆக்ரா, மதுரா ஆகிய மாவட்டங்களில் இன்று சட்டசபை தேர்தல் நடக்கிறது. மொத்தம் 623 வேட்பாளர்கள் இன்று சட்டசபை தேர்தலில் போட்டியிடுகின்றனர். இன்று 2.27 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர்.

58 தொகுதிகள்

58 தொகுதிகள்

உத்தர பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளில் இந்த 58 தொகுதிகள் மிக முக்கியமானது ஆகும். காரணம், இந்த 58 தொகுதிகளில் பெரும்பாலும் அதிக இடங்களை வெல்லும் கட்சிகள்தான் உத்தர பிரதேசத்தில் ஆட்சியை பிடித்து இருக்கிறது. இது மேற்கு உத்தர பிரதேசம் ஆகும். பொதுவாக சட்டசபை தேர்தலாக இருந்தாலும் சரி, லோக்சபா தேர்தலாக இருந்தாலும் சரி, இங்கு பாஜக மிகவும் வலிமையாக இருக்க கூடிய கட்சி ஆகும்.

 உத்தர பிரதேச சட்டசபை

உத்தர பிரதேச சட்டசபை

கடந்த 2012 உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் சமாஜ் வாதி - ஆர்எல்டி கூட்டணி இங்கு உள்ள 58 இடங்களில் 19 இடங்களை வென்றது. அந்த தேர்தலில் சமாஜ்வாதி வென்று அங்கு ஆட்சியை பிடித்தது. அதன்பின் 2017ல் இங்கு பாஜக 58 இடங்களில் 53 இடங்களை மொத்தமாக அள்ளியது. பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, ஆர்எல்டி என்று அனைத்து கட்சிகளும் இங்கே படுதோல்வி அடைந்தது. மொத்தமாக உ.பியில் பாஜக ஆட்சி அமைக்க மேற்கு உ.பி முக்கிய காரணமாக இருந்தது.

ஆர்எல்டி - சமாஜ்வாதி கூட்டணி

ஆர்எல்டி - சமாஜ்வாதி கூட்டணி

2017 சட்டசபை தேர்தலில் ஆர்எல்டி - சமாஜ்வாதி கூட்டணி இல்லை. ஆனால் இந்த முறை இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து உள்ளன. அதேபோல் பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனி தனியாக நிற்கின்றன. உத்தர பிரதேசத்தில் மற்ற பகுதிகளை விட மேற்கு உத்தர பிரதேசத்தில்தான் இஸ்லாமியர்கள் வாக்குகள் அதிகம். இங்குதான் இஸ்லாமியர்கள் மக்கள் தொகை அதிகம் உள்ளது. இதன் காரணமாக பகுஜன் சமாஜ், ஓவைசியின் AIMIM ஆகிய கட்சிகள் இங்கு அதிக அளவிலான இஸ்லாமிய வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது.

ஜாட் பிரிவு மக்கள்

ஜாட் பிரிவு மக்கள்

அதேபோல் இங்கு ஜாட் பிரிவு மக்கள் அதிகம் உள்ளனர். முசாபர்நகர் கலவரத்திற்கு பின் இங்கு ஜாட் - முஸ்லீம் மோதல் இருந்தது. இது 2014 லோக்சபா தேர்தல், 2017 சட்டசபை தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவாக சென்றது. ஆனால் தற்போது அங்கு ஜாட் - முஸ்லீம் மக்கள் இடையே ஒற்றுமை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது. அதோடு ஜாட் பிரிவினர் பலர் விவசாயிகள் என்பதால், எல்லோரும் பாஜகவிற்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளனர்.

விவசாயிகள்

விவசாயிகள்

விவசாயிகள் பலர் விவசாய சட்டங்கள் காரணமாக பாஜகவிற்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளனர். இதில் பலர் ஜாட் சமூகத்தினர் மற்றும் இடைநிலை ஜாதியினர். முக்கியமாக ஜாட் பிரிவை சேர்ந்த விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாய்த் இந்த முறை நேரடியாக சமாஜ்வாதி - ஆர்எல்டி கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கடந்த முறை போல இந்த முறை பாஜக எளிதாக 58 இடங்களில் அதிக இடங்களை வென்றுவிடாது. 2017 சட்டசபை தேர்தலில் இங்கு ஆர்எல்டி - சமாஜ்வாதி தனி தனியாக போட்டியிட்டு முறையே 2 மற்றும் 1 இடங்களை வென்றது.

 பாஜகவிற்கு சவால்

பாஜகவிற்கு சவால்

ஆனால் இந்த முறை இரண்டு கட்சிகளும் ஒன்றாக இணைந்து போட்டியிடுவதாக மேற்கு உத்தர பிரதேசத்தில் தேர்தல் முடிவுகள் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை பாஜக இங்கு 30 தொகுதிகளில் வெறும் குறைந்த வாக்கு எண்ணிக்கையில்தான் வென்றது. எனவே இந்த முறை பாஜகவிற்கு இங்கு கடுமையான போட்டி நிலவும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 58 தொகுதிகள் இந்த முறை உத்தர பிரதேசத்தில் கேம் சேஞ்சராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்ஹா சௌத்ரிஉத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 சட்டசபைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குபதிவு நடக்கிறது. 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் 620க்கும் அதிமானோர் முதற்கட்டத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

உத்தரப்பிரதேசத்தில் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் என நான்கு முனை போட்டி நடக்கிறது. நாளை முதற்கட்ட தேர்தல் நடைபெறவுள்ள 58 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்கள்:

வ.எண் தொகுதி வேட்பாளர் பெயர்
சமாஜ்வாதி பாஜக காங்கிரஸ் பகுஜன் சமாஜ்
1 கைரானா நஹித் ஹசன் மிரிகங்கா சிங் ஹாஜி அக்லாக் ராஜேந்திர சிங் உபாத்யாய்
2 தானா பவன் அஷ்ரப் அலி சுரேஷ் ராணா சத்யா சய்யம் சைனி ஜாகீர் மாலிக்
3 ஷாம்லி பிரசன்ன சவுத்ரி தேஜேந்திர சிங் நிர்வால் முகமது அயூப் ஜங் பிரிஜேந்திர மாலிக்
4 புதானா ராஜ்பால் பலியன் உமேஷ் மாலிக் தேவேந்திர காஷ்யப் ஹாஜி முகமது அனிஷ்
5 சார்தவால் பங்கஜ் கே.ஆர். மாலிக் சப்னா காஷ்யப் டாக்டர். யாஸ்மீன் ராணா சல்மான் சயீத்
6 புர்காசி (ரிசர்வ்) அனில் குமார் பிரமோத் உத்வால் தீபக் குமார் சுரேந்திர பால் சிங்
7 முஸாப்பர்நகர் சௌரப் கபில் தேவ் அகர்வால் சுபோத் சர்மா புஷ்பங்கர் பால்
8 கத்தவ்லி ராஜ்பால் சிங் சைனி விக்ரம் சைனி கௌரவ் பதி கர்தார் சிங் பதனா
9 மீராப்பூர் சந்தன் சவுகான் பிரசாந்த் குர்ஜார் மௌலானா ஜமீல் க்காஸ்மி முகமது சலீம்
10 சிவல்கஸ் குலாம் முகமது மனேந்திர பால் சிங் ஜகதீஷ் சர்மா நன்ஹே கான்
11 ஷ‌ர்தனா அதுல் சங்கீத் சோம் சையத் ரியானுதீன் சஞ்சீவ் குமார் தாமா
12 ஹஸ்தினாபூர் (ரிசர்வ்) யோகேஷ் வெர்மா தினேஷ் கதிக் அர்ச்சனா கவுதம் சஞ்சீவ் கே.ஆர். ஜாதவ்
13 கித்தோர் ஷாஹித் மஞ்சூர் சத்யவீர் தியாகி பபிதா குர்ஜர் குஷால் பால் மாவி
14 மீரட் கண்ட் மனிஷா அஹ்லாவத் அமித் அகர்வால் அவனிஷ் கஜாலா அமித் சர்மா
15 மீரட் ரஃபிக் அன்சாரி கமல் தத் சர்மா ரஞ்சன் சர்மா முகமது தில்ஷத்
16 மீரட் தெற்கு முகமது அடில் சோமேந்திர டோமர் நஃபீஸ் சைஃபி குன்வர் தில்ஷத் அலி
17 சப்ரவ்வுளி அஜய் குமார் சஹேந்திர சிங் ரம்லா டாக்டர் யூனுஸ் சவுத்ரி ...
18 பரெள‌த் ஜெய்வீர் சிங் டோமர் கிருஷ்ணபால் சிங் மாலிக் ராகுல் காஷ்யப் அங்கித் சர்மா
19 பாக்பத் அஹ்மத் ஹமீத் யோகேஷ் தாமா அனில் தேவ் தியாகி அருண் கசானா
20 லோனி மதன் பையா நந்த்கிஷோர் குர்ஜர் யாமீன் மாலிக் ஹாஜி ஆகில் சவுத்ரி
21 முராத்நகர் சுரேந்திர குமார் அஜித் பால் தியாகி பிஜேந்திர யாதவ் ஹாஜி அய்யூப் இத்ரிஷி
22 ஷாஹிபாபாத் அமர்பால் சுனில் சர்மா சங்கீதா தியாகி அஜீத் கே.ஆர். பால்
23 காஸியாபாத் விஷால் வெர்மா அதுல் கார்க் சூஷன் கோயல் கிருஷ்ண குமார் சுக்லா
24 மோடி நகர் சுதேஷ் சர்மா மஞ்சு சிவாச் நீரஜ் குமாரி டாக்டர் பூனம் கர்க்
25 தௌலானா அஸ்லாம் அலி தர்மேஷ் டோமர் அரவிந்த் சர்மா வாசித் பிரதான்
26 ஹபூர் (ரிசர்வ்) கஜ்ராஜ் சிங் விஜய் பால் ஆட்தி பாவனா வால்மீகி மனிஷ் கே.ஆர். மோனு
27 கர்முக்டேஷ்வர் ரவீந்திர சவுத்ரி ஹரேந்திர சவுத்ரி அப்ஹா சௌத்ரி மதன் சௌஹான்
28 நொய்டா சுனில் சவுத்ரி பங்கஜ் சிங் பன்குரி பதக் கிரிபரம் சர்மா
29 தாத்ரி ராஜ்குமார் தேஜ்பால் சிங் நகர் தீபக் பாதி சோட்டிவாலா மன்வீர் சிங் பாதி
30 ஜேவார் அவ்தார் சிங் பதானா திரேந்திர சிங் மனோஜ் சவுத்ரி நரேந்திர பாதி தாதா
31 சிக்கந்த்ராபாத் ராகுல் யாதவ் லக்ஷ்மிராஜ் சிங் சலீம் அக்தர் சௌத்ரி மன்வீர் சிங்
32 புலந்த்ஷஹர் ஹாஜி யூனுஸ் பிரதீப் சவுத்ரி சுஷில் சவுத்ரி மொபின் கல்லு குரைஷி
33 சைய‌னா தில்நவாஜ் கான் தேவேந்திர சிங் லோதி பூனம் பண்டிட் சுனில் பரத்வாஜ்
34 அனுப்ஷஹர் கே.கே சர்மா சஞ்சய் ஷர்மா சவுத்ரி கஜேந்திரா ராமேஷ்வர் சிங் லோதி
35 தேபாய் ஹரிஷ் குமார் சி பி சிங் சுனிதா சர்மா கரண் பால் சிங்
36 ஷிகர்பூர் கிரண் பால் சிங் அனில் சர்மா ஷியாவுர் ரஹ்மான் முகமது ரஃபிக்
37 குர்ஜா (ரிசர்வ்) பன்ஷி சிங் மீனாட்சி சிங் துக்கி மால் காதிக் வினோத் குமார் ஜாதவ்
38 கைர் (ரிசர்வ்) பகவதி சூர்யவன்ஷி அனூப் பால்மிகி மோனிகா சூர்யவன்ஷி சாருகென் கென்
39 பாரௌலி பிரமோத் கவுர் தாக்கூர் ஜெய்வீர் சிங் கௌரங் தேவ் சவுகான் நரேந்திர ஷர்மா
40 அட்ரெளலி வீரேஷ் யாதவ் சந்தீப் சிங் தர்மேந்திர குமார் டாக்டர் ஓம்வீர் சிங்
41 ச்ச‌ர்ரா லக்ஷ்மி தங்கர் ரவேந்திர பால் சிங் அகிலேஷ் சர்மா திலக் ராஜ் யாதவ்
42 கோயில் ஷாஸ் இஷாக் அனில் பராஷர் விவேக் பன்சால் முகமது பிலால்
43 அலிகர் ஜாபர் ஆலம் முக்தா ராஜா முகமது சல்மான் இம்தியாஸ் ரசியா கான்
44 இக்லஸ் (ரிசர்வ்) பீர்பால் சிங் திவாகர் ராஜ்குமார் சஹ்யோகி ப்ரீத்தி தங்கர் சுஷில் கே.ஆர் ஜாதவ்
45 ச்சட்டா தேஜ்பால் சிங் லக்ஷ்மி நாராயண் பூனம் தேவி சோன்பால் சிங்
46 மன்ட் சஞ்சய் லதர் ராஜேஷ் சவுத்ரி சுமன் சவுத்ரி ஷியாம் சுந்தர் சர்மா
47 கோவர்தன் ப்ரீதம் சிங் மெக்ஷ்யாம் சிங் தீபக் சவுத்ரி ராஜ் குமார் ராவத்
48 மதுரா தேவேந்திர அகர்வால் ஸ்ரீகாந்த் ஷர்மா பிரதீப் மாத்தூர் சதீஷ் கே.ஆர் சர்மா
49 பல்தேவ் (ரிசர்வ்) பபிதா தேவி பூரன் பிரகாஷ் ஜாதவ் வினேஷ் குமார் அசோக் கே.ஆர் சுமன்
50 எத்மட்பூர் டாக்டர் வீரேந்திர சிங் தரம்பால் சிங் ஷிவானி சிங் பாகேல் சர்வேஷ் பாகேல்
51 ஆக்ரா கண்ட். (ரிசர்வ்) குன்வர் சந்த் ஜி.எஸ் தர்மேஷ் சிக்கந்தர் வால்மீகி பர்தேந்து அருண்
52 ஆக்ரா தெற்கு வினய் அகர்வால் யோகேந்திர உபாத்யாயா அனுஜ் சர்மா ரவி பரத்வாஜ்
53 ஆக்ரா வடக்கு ஞானேந்திரா புருஷோத்தம் கந்தேல்வால் வினோத் கே.ஆர். பன்சால் ஷபீர் அப்பாஸ்
54 ஆக்ரா ரூரல் (ரிசர்வ்) மகேஷ் குமார் ஜாதவ் பேபி ராணி மௌரியா உபேந்திர சிங் கிரண் பிரபா கேசரி
55 ஃபதேபூர் சிக்ரி பிரிஜேஷ் சாஹர் சௌத்ரி பாபுலால் ஹேமந்த் சாஹர் டாக்டர் முகேஷ் கே.ஆர் ராஜ்புத்
56 கெரகர்க் ரௌத்தன் சிங் பகவான் குஷ்வாஹா ராம்நாத் ஷிகர்வார் கங்காதர் குஷ்வாஹா
57 ஃபதேஹாபாத் ரூபாலி தீட்சித் சோடேலால் வெர்மா ஹோதம் சிங் நிஷத் சைலேந்திர பிரதாப் சிங்
58 பாஹ் மதுசூதன் ஷர்மா ராணி பக்ஷலிகா மனோஜ் தீட்சித் நிதின் வெர்மா

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+