அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை.. பள்ளியில் விளையாடிய 3ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த சோகம்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பள்ளியில் விளையாடி கொண்டிருந்த 9 வயது நிரம்பிய 3ம் வகுப்பு மாணவி திடீரென்று மயங்கி விழுந்தார். உடனடியாக மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் இறந்த நிலையில் அதற்கு மருத்துவர் கூறிய காரணம் அனைவரையும் அதிர வைத்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் தனியாருக்கு சொந்தமான பள்ளி உள்ளது. நேற்று முன்தினம் வழக்கம்போல் பள்ளி செயல்பட்டது. பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு பாடம் கற்பிக்கப்பட்டது.

அதன்பிறகு பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மாணவ-மாணவிகள் விளையாடி கொண்டிருந்தனர். இந்த வேளையில் 9 வயது நிரம்பிய 3ம் வகுப்பு மாணவி மான்வி சிங்கும் தோழிகளுடன் விளையாடி கொண்டிருந்தார்.
இந்த வேளையில் திடீரென்று மாணவி பள்ளி விளையாட்டு மைதானத்தில் மயங்கி கிடந்தார். இதுபற்றி உடனடியாக சக மாணவிகள் ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். ஆசிரியர்கள் மான்வி சிங்கை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன்பிறகு மாணவி மான்வி சிங்கை அவரது பெற்றோர் மேல் சிகிச்சைக்காக இன்னொரு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று மாணவி மான்வி சிங் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மாணவி மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக டாக்டர்கள் கூறினர். இதனை கேட்டு மான்வி சிங்கின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர்.
பெரும்பாலும் மாரடைப்பு என்பது இளம்வயதினர், முதியவர்களுக்கு தான் வருகிறது. விதிவிலக்காக சிறுவர், சிறுமிகளுக்கும் தற்போது மாரடைப்பு ஏற்படுகிறது. அந்த வகையில் மாரடைப்பு 9 வயது நிரம்பிய 3ம் வகுப்பு மாணவியின் உயிரை பறித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி பள்ளி முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், ‛‛மைதானத்தில் விளையாடிபோது 9 வயது நிரம்பிய 3ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் மயங்கினார். அவர் உடனடியாக மருத்தவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் போலீசாரின் கவனத்துக்கு சென்றது. ஆனால் மாணவி மான்வி சிங்கின் பெற்றோர் வழக்கு எதுவும் பதிவு செய்யவேண்டாம் என்று கூறிவிட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications