லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உத்தரப்பிரதேச தேர்தல்.. பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. கோரக்பூரில் ஆதித்யநாத் போட்டி

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டு உள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். 95 வேட்பாளர்களின் பெயர்கள் முதல்கட்டமாக வெளியிடப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச சட்டசபை தேர்தலுக்காக பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. ஆளும் கட்சியான பாஜக அங்கு மீண்டும் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது.

யோகி ஆதித்யாநாத்தை முன்னிறுத்தி பாஜக தேர்தலை சந்திக்க உள்ளது. உத்தர பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10ம் தேதி முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

உ.பி. சட்டசபை தேர்தல்: முதல்வர் யோகி அயோத்தி தொகுதியில் போட்டி?.. பாஜகவின் மாஸ்டர் பிளான் உ.பி. சட்டசபை தேர்தல்: முதல்வர் யோகி அயோத்தி தொகுதியில் போட்டி?.. பாஜகவின் மாஸ்டர் பிளான்

 எங்கு போட்டி

எங்கு போட்டி

இந்த நிலையில்தான் தற்போது உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அங்கு இந்த முறை சட்டசபை தேர்தலில் முதல்வர் ஆதித்யநாத் போட்டியிட மாட்டார். மாறாக தேர்தலுக்கு பின் முதல்வர் ஆனதும் இடைத்தேர்தலை சந்திப்பார் என்று கூறப்பட்டது. அதன்பின் யோகி ஆதித்யநாத் அயோத்தி தொகுதியில் போட்டியிட இருக்கிறார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டன.

கோரக்பூர்

கோரக்பூர்

மாறாக இந்த முறை கோரக்பூர் தொகுதியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் போட்டியிடுவார் என்று பாஜக சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதி ஆதித்யநாத் மிகவும் வலுவாக இருக்கும் தொகுதியாகும். ஐந்து முறை கோரக்பூர் தொகுதியில் இருந்து எம்பியாக வெற்றிபெற்று இவர் லோக்சபாவிற்கு சென்றுள்ளார். இதனால் வலுவான கோரக்பூர் தொகுதியை ஆதித்யநாத் தேர்வு செய்து இருக்கிறார்.

எத்தனை பேர்

எத்தனை பேர்

ஆதித்யநாத் சேர்த்து மொத்தமாக 95 வேட்பாளர்களின் பெயர்கள் முதல்கட்டமாக வெளியிடப்பட்டுள்ளது. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா சிரத்து தொகுதியில் இருந்து போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட தேர்தல் நடக்கும் 58 இடங்களில் 57 இடங்களுக்கும் இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கும் 55 இடங்களில் 38 இடங்களுக்கும் பாஜக வேட்பாளர்களை அறிவித்துள்ளது. பாஜகவில் இருந்து சங்கேத் சோம், தீரிந்தர் சிங், தேஜ்பால்நாகர், அனூப் பிரதான் போன்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் விவரம்

தேர்தல் விவரம்

பாஜகவில் இருந்து வரிசையாக 10 எம்எல்ஏக்கள் வெளியேறிய நிலையில் இந்த பட்டியல் முக்கியத்துவம் பெறுகிறது. உத்தர பிரதேசத்தில் 2வது கட்ட தேர்தல் பிப்ரவரி 14ம் தேதி நடைபெறும். 3வது கட்ட தேர்தல் பிப்ரவரி 20ம் தேதி நடைபெறும். உத்தர பிரதேசத்தில் 4வது கட்ட தேர்தல் பிப்ரவரி 23ம் தேதி நடைபெறும். உத்தர பிரதேசத்தில் 5வது கட்ட தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறும். உத்தர பிரதேசத்தில் 6வது கட்ட தேர்தல் மார்ச் 3ம் தேதி நடைபெறும்.உத்தர பிரதேசத்தில் 7வது கட்ட தேர்தல் மார்ச் 7ம் தேதி நடைபெறும். தேர்தல் முடிவுகள் மார்ச் 10ம் தேதி வெளியிடப்படும் .

English summary
Uttar Pradesh Election 2022: BJP releases it first set of candidates list, Adityanath to field in Gorakhpur this time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X