வாக்கு இயந்திரங்கள் மாற்றம்..? அகிலேஷ் அளித்த பகீர் புகார்..அதிகாரி சஸ்பெண்ட்.. பரபர உ.பி. தேர்தல்.!
லக்னோ : உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசி சட்டமன்றத் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்ட எழுந்த புகார் தொடர்பாக தேர்தல் அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற நிலையில் வரும் மார்ச் 10ஆம் தேதியான நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் இல்லாமல் தேர்தல் நடைபெற்ற நிலையில் நாளை மறுநாள் பலத்த பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

அகிலேஷ் யாதவ்
இந்நிலையில் உத்திரப்பிரதேசத்தில் வேட்பாளர்களுக்கு தெரியாமல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை விவரங்களுக்கு மாற்றம் செய்வதாகவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது குற்றம் சாட்டியுள்ளார்.

முறைகேடு என புகார்
அயோத்தியில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற உள்ளதாகவும் அதனால் பாஜக பயப்படுவதாக கூறியுள்ள அகிலேஷ் , தேர்தல் ஆணைய அதிகாரிகள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைக்கேடு செய்தனர் எனவும், வாரணாசி தேர்தல் அதிகாரி உள்ளூர் வேட்பாளர்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சென்றனர் என்றார். இந்தப் புகார் குறித்து தேர்தல் ஆணையம் கவனிக்க வேண்டும் எனவும் அகிலேஷ் கூறினார்.

எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
மேலும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எந்த வழியில் கொண்டு செல்லப்பட்டாலும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், இது ஒரு திருட்டு போல எனக் கூறியுள்ளார். மேலும் நமது வாக்குகளை நானம் காப்பாற்ற வேண்டும் எனவும் இந்த முறைகேடுகளை எதிர்த்து நீதிமன்றம் செல்லலாம் ஆனால் அதற்கு முன் ஜனநாயகத்தை காப்பாற்ற நாம் மக்கள்முன் வேண்டுகோள் விடுக்க விரும்புகின்றேன் எனவும் அகிலேஷ் தெரிவித்தார்.
Recommended Video

அதிகாரி சஸ்பெண்ட்
இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் நேற்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக வாரணாசியின் மூத்த நிர்வாக அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பயிற்சி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்வதில் விதிகளை மீறியதாக வாரணாசி கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் என்.கே.சிங் மீது நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications