சனி, ஞாயிறுகளில் மட்டும் கடிக்கும் பாம்பு.. ஒரே மாதத்தில் 6 முறை.. ஆனாலும் உயிர்பிழைத்த அதிசய இளைஞன்!
லக்னோ: பாம்பு ஒரு முறை கடித்தாலே அதன் விஷம் ஏறி உயிரிழப்புகள் ஏற்படும். ஆனால், இங்கே உ.பி மாநிலத்தில் இளைஞர் ஒருவரைப் பாம்பு குறிவைத்து ஆறு முறை கடித்துள்ள போதிலும் அவருக்கு எதுவுமே ஆகவில்லையாம். இந்த அதிசய இளைஞனைப் பாம்பு கடந்த ஒரு மாதத்தில் 6 முறை கடித்த போதிலும் அவருக்கு எதுவுமே ஆகவில்லை.
பாம்பு என்றாலே படையே நடுங்கும் என்பார்கள்.. பாம்பு கடித்து விஷம் ஏறினால் கொஞ்ச நேரத்தில் உயிரிழப்பு ஏற்பட்டுவிடும். இதுபோல ஒவ்வொரு ஆண்டும் பல உயிரிழக்கிறார்கள். ஆனால், இங்கே உத்தரப் பிரதேச மாநிலத்தில் ரொம்பவே வினோதமான ஒரு சம்பவம் நடந்துள்ளது.

6 முறை: அங்கே உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தில் உள்ள சௌரா கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவரைக் கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் 6 முறை பாம்பு கடித்துள்ளதாம். ஒவ்வொரு முறையும் பாம்புகள் அவரை கடிப்பதும், அதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுகிறார். அதன் பிறகு குணமடைந்து வீடு திரும்புவது தொடர்கதையாகவே இருக்கிறதாம்.
இதில் முதல் சம்பவம் கடந்த ஜூன் 2ம் தேதி நடந்துள்ளது. அன்றைய தினம் அவரது வீட்டில் பாம்பு புகுந்துள்ளது. தூங்கிக் கொண்டிருந்த அவர் அப்போது தான் எழுந்த நிலையில், பாம்பு அவரை கடித்துள்ளது.. இதையடுத்து உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுள்ளார். அதன் பிறகு கடந்த ஜூலை 6ம் தேதி வரை மட்டும் துபேவை ஆறு முறை பாம்பு கடித்துள்ளதாம்.
என்ன நடந்தது: முதல் நான்கு முறையும் அவர் வீட்டில் இருந்த போது தான் பாம்பு கடித்துள்ளது. இதனால் அவரது வீட்டில் இருந்தவர்கள் துபேவை பார்த்தே அஞ்சியுள்ளனர். வீட்டை விட்டு வேறு இடத்திற்குச் செல்லும்படி துபேவை அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து அவர் அங்கு ராதாநகரில் உள்ள தனது அத்தை வீட்டிற்குச் சென்றுள்ளார்.. ஆனால் அங்கும் அவரை பாம்புக் கடிக்கும் சம்பவம் தொடர்ந்துள்ளது.
இதனால் எங்கு துபேவுக்கு எதாவது ஆகிவிடுமோ என அஞ்சிய அவரது பெற்றோர் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். இருப்பினும், கடந்த ஜூலை 6ஆம் தேதி, மீண்டும் அவரை பாம்பு கடித்துள்ளது. அப்போது தான அவரது உடல்நிலை மிக மோசமான நிலைக்குச் சென்றுள்ளது.
குணமடைந்துவிட்டார்: அவர் மருத்துவமனைக்குச் சென்ற நிலையில், அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் சொன்னதால் துபேவின் பெற்றோர் கலக்கமடைந்தனர். இருப்பினும், திடீரென என்ன அதிசயமோ தெரியவில்லை துபே குணமடைந்து இருக்கிறார். இதை அங்கிருந்தவர்களால் நம்பவே முடியவில்லையாம்.
சனி, ஞாயிறு: இதில் மற்றொரு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் விகாஸ் துபேவை 6 முறை பரம்புகள் கடித்துள்ள நிலையில், அவை அனைத்தும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் தான் நடந்துள்ளன. மேலும், ஒவ்வொரு முறையும் பாம்பு தன்னை கடிப்பதற்கு முன்பும் ஏதோ நடக்கப் போகிறது என தோன்றியதாகவும் அவர் கூறுகிறார்.
உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, உலகெங்கும் பல லட்சம் பாம்புக் கடி சம்பவங்கள் நடக்கிறது. இதனால் ஆண்டுதோறும் சுமார் 1.3 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். மேலும், பல லட்சம் பேருக்குப் பலவித குறைபாடுகளும் ஏற்படுகிறது.
-
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
Optical illusion: நீங்க அதிபுத்திசாலியா.. படத்தில் எந்த டேங்க் முதலில் காலியாகும்? 8 செகண்டுக்குள் கண்டுபிடிங்க! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications