வகுப்பறையில் மாணவனை வைத்து மசாஜ்..ஆசிரியை ஊர்மிளா மீது பாய்ந்த நடவடிக்கை
லக்னோ: உத்தர பிரதேசத்தில் அரசு பள்ளியில் மாணவனை மசாஜ் செய்ய வைத்த ஆசிரியை அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை சில ஆசிரியர்-ஆசிரியைகள் தங்களின் சொந்த வேலைக்கு பயன்படுத்துவதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுவது உண்டு. குறிப்பாக பள்ளி மாணவர்களை டீ, காபி வாங்கி வர ஆசிரியர்கள் பயன்படுத்துவதாக ஆங்காங்கே புகார்களும் கூறப்பட்டுள்ளன.
இந்நிலையில் தான் உத்தர பிரதேசத்தில் அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியை ஒருவர் மாணவனை மசாஜ் செய்யக்கூறிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:

உத்தரபிரதேச அரசு பள்ளி ஆசிரியை
உத்தர பிரதேச மாநிலம் ஹர்தோய் அருகே போகரி அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஆசிரியைராக இருப்பவர் ஊர்மிளா சிங். இவர் தனக்கு மசாஜ் செய்து விடும்படி மாணவர்களிடம் கூறி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் தான் சமீபத்தில் ஒரு வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவ துவங்கியது.

மசாஜ் செய்த மாணவன்
அதாவது பள்ளி வகுப்பறையில் நாற்காலியில் அமர்ந்து கொண்ட ஆசிரியை ஊர்மிளா சிங், மாணவன் ஒருவரை அழைத்து மசாஜ் செய்யும்படி கூறுகிறார். இதையடுத்து அந்த மாணவனும் ஆசிரியர் சொல்வதை கேட்காமல் இருந்தால் தனக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்படும் என பயந்தான். இதனால் மாணவனும் ஆசிரியருக்கு மசாஜ் செய்கிறார். ஊர்மிளா சிங் மசாஜ் குறித்த அறிவுரைகளை கூற மாணவர் அதனை செய்துள்ளார்.

வீடியோவால் கிளம்பிய எதிர்ப்பு
இந்நிலையில் தான் ஆசிரியைக்கு, மாணவன் மசாஜ் செய்வதை யாரோ ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஆசிரியைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

சஸ்பெண்ட்நடவடிக்கை
பள்ளிக்கு படிக்க செல்லும் மாணவரை, ஆசிரியர் ஒருவர் இப்படி பயன்படுத்தியது மிகவும் கொடுமையானது. இதனால் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை விசாரணை நடத்தியது. இந்த விசாரணையை தொடர்ந்து ஆசிரியை ஊர்மிளா சிங்கை சஸ்பெண்ட் செய்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications