சபாநாயகர் சொல்வதை நீங்களே கேட்க மாட்டீங்க.. மீட்டிங்கில் ராகுல் காந்தியிடம் சண்டைக்கு போன அமைச்சர்
லக்னோ: ‛‛லோக்சபாவில் சபாநாயகர் சொல்வதை நீங்களே கேட்கமாட்டீங்க.. அப்புறம் நான் எதுக்கு நீங்க சொல்றதை எல்லாம் கேட்க வேண்டும்?'' என்று ராகுல் காந்தியின் மீட்டிங்கில் உத்தர பிரதேச மாநில அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங் கேள்வி எழுப்பி வாக்குவாதம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு சென்றவர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி உள்ளார். இவர் உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையிதான் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் ரேபரேலியில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது.

தொகுதியின் எம்பி என்ற முறையில் ராகுல் காந்தி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் உத்தர பிரதேச மாநில எம்பி தினேஷ் பிரதாப் சிங்கும் பங்கேற்றார். ராகுல் காந்தியும், தினேஷ் பிரதாப் சிங்கும் அருகருகே அமர்ந்து இருந்தனர்.
அப்போது இடையிடையே தினேஷ் பிரதாப் சிங் பேசினார். அதற்கு ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்தார். ராகுல் காந்தி, ‛‛இந்த கூட்டத்துக்கு நான் தலைமை தாங்குகிறேன். கூட்டத்தில் பேச விரும்பினால் முதலில் அனுமதிபெற வேண்டும்'' என்றார்.
இதனை அவர் ஏற்கவில்லை. இதனால் அமைச்சர் தினேஷ், ‛‛லோக்சபாவில் சபாநாயகர் சொல்வதை நீங்கள் கேட்பது இல்லை. அவரது சொல்லுக்கு நீங்கள் கீழ்படிவது இல்லை. அப்படியென்றால் நான் ஏன் உங்களின் பேச்சை கேட்க வேண்டும்? நீங்கள் சொல்வது போல் நடந்து கொள்ள வேண்டும்'' என்று கூறினார்.
இதனை கேட்டு ராகுல் காந்தி அதிர்ச்சியடைந்தார். ஏனென்றால் தினேஷ் இப்படி சொல்வார் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. மேலும் தற்போது அமைச்சர் தினேஷ் பாஜகவில் இருந்தாலும் கூட முதலில் அவர் காங்கிரஸ் கட்சியில் தான் பயணித்தார்.
அதன்பிறகு தான் பாஜகவுக்கு சென்றார். கடந்த 2019 லோக்சபா தேர்தலில் ரேபரேலியில் சோனியா காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் களமிறங்கி தோற்றார். சோனியா காந்தி 5,34,918 ஓட்டுகள் வாங்கிய நிலையில் தினேஷ் பிரதாப் சிங் 2,67,740 ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.
அதன்பிறகு கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் ரேபரேலியில் ராகுல் காந்தி போட்டியிட்டார். அவரை எதிர்த்தும் பாஜக சார்பில் தினேஷ் பிரதாப் சிங் போட்டியிட்டார். ராகுல் காந்தி 6,87,649 ஓட்டுகள் பெற்ற நிலையில் தினேஷ் பிரதாப் சிங் 2,97,619 ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.
இப்போது தினேஷ் பிரதாப் சிங் உத்தர பிரதேச மேல்சபை உறுப்பினராக உள்ளார். அதாவது எம்எல்சியாக உள்ளார். அதோடு அந்த மாநிலத்தின் தோட்டக்கலைத்துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார். ஒரு காலத்தில் ராகுல் காந்தி, சோனியா காந்தியுடன் நெருக்கமாக இருந்தார். இப்போது அவர் பாஜகவில் சேர்ந்து அவரை எதிர்த்து பேசி உள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
-
ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கு வருவாரா? நேரடியாக கேட்ட திமுக.. பதில் சொல்ல தயங்கும் காங்கிரஸ்! -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை!












Click it and Unblock the Notifications