Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலையை காட்டும் பாஜக.. கம்மென்று இருக்கும் கதர்கள்.. பெருகும் மிஸ்டேக்குகள்.. உபியில் என்ன நடக்கிறது

உபியில் காங்கிரஸ் தன் தவறுகளை சரி செய்துகொள்ளுமா என்று தெரியவில்லை

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரபிரதேச காங்கிரஸ் நலிவடைந்து சென்று கொண்டிருக்கும் நிலையில், அது அக்கட்சியின் தொண்டர்களை சோர்வில் கொண்டு போய் விட்டுள்ளது..!

உத்தரபிரதேச சட்ட மேல்-சபை 1887-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. முதலில் 9 உறுப்பினர்களை கொண்டதாக இருந்தது.

1909-ம் ஆண்டு, 46 உறுப்பினர்களை கொண்டதாக விரிவுபடுத்தப்பட்டது. அப்போது, நேருவின் அப்பா, மோதிலால் நேரு, காங்கிரசின் முதலாவது உறுப்பினராக (எம்எல்சி) பதவி ஏற்றார்.

எம்எல்சி

எம்எல்சி

அப்போதிருந்தே தொடர்ந்து மேல்-சபையில் காங்கிரஸ் பிரதிநிதித்துவம் இருந்து வருகிறது.. இப்போது காங்கிரஸ் சார்பில் ஒரே எம்எல்சியாக இருந்த தீபக்சிங்கின் பதவிக்காலமும் முடிவடைந்துவிட்டது. இதையடுத்து, கடந்த 113 வருடங்களில், உத்தரபிரதேச சட்ட மேல்-சபையில் முதல் முறையாக காங்கிரசுக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை துயரமானது என்று சட்டசபை காங்கிரஸ் தலைவர் ஆராதனா மிஸ்ரா மோனா வேதனை தெரிவித்துள்ளார்.

 உத்தரபிரதேசம்

உத்தரபிரதேசம்

இதற்கு என்ன காரணம்? நடந்து முடிந்த உத்தரபிரதேச சட்டசபை தேர்தலே பல காரணங்களை அம்மாநிலத்துக்கு சொல்லி உள்ளது.. காங்கிரஸ் கட்சி வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால், புதிதாக யாரையும் மேல்சபைக்கு அனுப்ப முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஆசிரியர்கள் ஒதுக்கீட்டில் மேல்-சபைக்கு நடக்கும் தேர்தலில் காங்கிரஸ் பிரதிநிதிகளை அனுப்ப முயற்சிப்போம் என்று ஆராதனா மிஸ்ரா மோனா நம்பிக்கை கூறுகிறார்.

 72 உறுப்பினர்கள்

72 உறுப்பினர்கள்

அதே சமயத்தில், 100 உறுப்பினர்களை கொண்ட மேல்சபையில், 72 உறுப்பினர்களுடன் ஆளும் பாஜக வலிமையான இடத்தில் உள்ளது.. காங்கிரசின் பலவீனத்தில் பாஜக வளர்ந்து கொண்டிருக்கிறது என்பது மீண்டும் உறுதியாகி உள்ளது.. இதை மேல்சபை மட்டும் பொருத்திப் பார்த்துவிட முடியாது.. விரைவில் எம்பி தேர்தல் வர உள்ளநிலையில், பாஜக அதற்கான வேலையில் இப்போதே இறங்கி உள்ளது.. ஆனால், காங்கிரஸ் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை..

 பிரச்சார முறை

பிரச்சார முறை

இதற்கு கடந்த முறை சட்டசபை தேர்தலின்போது நடந்த தவறுகளையும் சரி செய்ய வேண்டி உள்ளது.. சட்டசபை தேர்தலில் பிரியங்கா காந்தியின் பிரச்சார முறை அனைவரையும் ஈர்த்தது, ஒருவித நம்பிக்கையையும் வெளிப்படுத்தியது.. மகளிருக்கு 40 சதவிகித தொகுதிகளை பிரியங்கா ஒதுக்கியது, வரவேற்பை பெற்றாலும், அந்த அறிவிப்பு விளம்பர ஸ்டண்ட் என்றே பேசப்பட்டது.. அதாவது அந்த அறிவிப்பில் சமூக அடிப்படை இல்லை என்றே விமர்சிக்கப்பட்டது..

செல்வாக்கு

செல்வாக்கு

சுற்று சுற்றி அங்குள்ள மக்களை பற்றியே காங்கிரஸ் யோசித்ததே தவிர, கட்சியில் நடக்கும் உட்பூசலை கவனிக்கவில்லை என்றும், பிரியங்கா சீட் தந்த பெண்கள் பலரும் வெகுஜன செல்வாக்கை கொண்டிருக்கவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த தேர்தல் என்றில்லாமல், எந்த தேர்தலிலும் ராகுலின் பங்களிப்பு பிரியங்காவைவிட அதிகமாக இருந்ததில்லை என்பது உபி காங்கிரஸ் தரப்பினரின் பெரிய வருத்தம்.. நடக்க போகும் எம்பி தேர்தலில், பக்கா பிளான்களுடன் பாஜக மும்முரமாகி வரும்போது, காங்கிரஸோ இருக்கிற இடம் தெரியாமல் மறைந்து கொண்டு வருவது அம்மாநில தொண்டர்களை கவலைக்குள்ளாக்கி வருகிறதாம்..

 நட்சத்திர பிரச்சாரம்

நட்சத்திர பிரச்சாரம்

இந்த முறையாவது, பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பிரச்சாரகராக மட்டுமே வலம் வராமல், தேர்தலில் போட்டியிட்டால் சிறிது பலன் ஏற்படும் என்ற முணுமுணுப்புகளும் எழ ஆரம்பித்துள்ளன. ஒருவேளை பிரியங்கா, தேர்தலில் போட்டியிட நேர்ந்தால், மற்ற மாநில பிரச்சாரங்களை, ராகுல்தான் துணிந்து கையில் எடுக்க வேண்டும், அப்போதுதான், உபியில் காங்கிரஸ் கொஞ்சமாவது தப்பும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. அதுமட்டுமல்ல, அகிலேஷை காங்கிரஸ் லேசில் எடை போடக்கூடாது.. ராகுல்காந்தி மனது வைத்தால், அகிலேஷ் யாதவ் வளர்ச்சியை, ஆதரவை நிச்சயம் குறைக்க முடியும் என்று நம்புகிறார்கள்..

Recommended Video

    காங்கிரஸ் இனப்பகைவன்... இவன் மனிதகுலப்பகைவன்... பாஜகவை விளாசிய Seeman *Live
    நெருக்கடி

    நெருக்கடி


    அதேசமயம், காங்கிரஸ் கட்சி இனியாவது, உபியில் ஏதாவது ஒரு பிராந்திய தலைவரை வளர்க்க வேண்டும், அல்லது ஒரு அமைப்பு, சமூகத்தின் தலைவர்களை உருவாக்க வேண்டும்.. காரணம், ஒரு சிறிய பிரச்சனை என்றாலும், அதற்கு பிரியங்காதான் நேரில் வர வேண்டிய நிலைமை உள்ளது.. ஆக மொத்தம், உபி காங்கிரஸ் தன்னை பல விதங்களிலும் திருத்தி கொள்ள வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றே சொல்லலாம்..!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+