உங்களுக்கு நிதி உதவி வந்ததா? மோடி கேட்ட கேள்வி.. லைவ் நிகழ்ச்சியில் பெண் சொன்ன பரபரப்பு பதில்!
லக்னோ: நேற்று உத்தர பிரதேசத்தில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி கேட்ட கேள்விக்கு பெண் ஒருவர் அளித்த பதில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த வருடம் நடக்க உள்ள நிலையில் பிரதமர் மோடி அங்கு பல முக்கிய நலத்திட்டங்களை தொடங்கி வைத்துக் கொண்டு இருக்கிறார். இந்த நிலையில்தான் நேற்று பிரதமர் மோடி லக்னோவில் "அஸாதி 75 புதிய நகர இந்தியா - நகர்ப்புற மேம்பாட்டு திட்டம்" என்ற தலைப்பில் எக்ஸ்போ ஒன்றில் கலந்து கொண்டார்.
உத்தர பிரதேசத்திலும், தேசம் முழுக்கவும் மத்திய அரசு கொண்டு வந்து இருக்கும் நலத்திட்டங்கள் குறித்து இதில் பிரதமர் மோடி பேசினார். இதில் கலந்து கொண்ட பொது மக்களிடம் அரசின் நலத்திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடத்தினார்.

பிரதமர் மோடி
இதில் பிரதமர் மோடி நிகழ்த்திய உரையில், இந்த நாள் அஸாதி 75 புதிய நகர இந்தியா - நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்திற்கான அடிக்கல் உத்தர பிரதேசத்தில் நாட்டப்பட்டு உள்ளது. பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் 75 ஆயிரம் பேருக்கு உத்தர பிரதேசத்தில் உள்ள 75 மாவட்டங்களில் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது. இவர்களுக்கு இலவச வீடுகளுக்கான சாவி இன்று அளிக்கப்பட்டது.

சந்தோசம்
எனக்கு இது மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுக்கிறது. புதிய வீடுகளை பெற்றுக்கொண்ட மக்கள் தங்கள் வீடுகளில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை கொண்டாட முடியும், அவர்கள் இனி தங்கள் சொந்த வீடுகளில் இருக்க முடியும். பிரதான் மந்திரி சுயநிதி யோஜனா திட்டத்தின் மூலம் நாடு முழுக்க சாலையோரங்களில் கடைகள் வைத்திருக்கும் மக்கள் நலன் அடைந்துள்ளனர். அவர்கள் இன்று இந்த விழாவிற்கும் வந்துள்ளனர்.

திட்டம்
இந்த திட்டம் மூலம் 25 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு 2500 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் மட்டும் சாலையோரங்களில் கடைகள் வைத்திருக்கும் 7 லட்சம் மக்கள் இதன் மூலம் பலன் அடைந்து இருக்கிறார்கள். நாங்கள் இந்த திட்டங்களை கொண்டு வந்த போது சிலர் அதை கிண்டல் செய்தனர். ஆனால் இப்போது மக்கள் நேரடியாக இதன் மூலம் பலன் அடைந்துள்ளனர். நேரடியாக அவர்களின் வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது, என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

உரையாடல்
இதில் கலந்து கொண்ட பொது மக்களிடம் அரசின் நலத்திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடத்தினார். ஒவ்வொரு பெண்களிடமும், சாலையோர கடை வைத்து இருக்கும் கடைக்காரர்களிடம் அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாடினார். அப்போது அங்கு அமர்ந்து இருந்த பெண் ஒருவரிடம், உங்களுக்கு பிரதான் மந்திரி சுயநிதி யோஜனா திட்டத்தின் மூலம் நிதி கிடைத்ததா.. கணக்கில் நிதி சேர்க்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பினார்.

பெண் பதில்
அதற்கு அங்கு இருந்த பெண்.. இல்லை சார்.. எனக்கு பணம் எதுவும் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டார். இந்த பெண்ணின் பதிலால் அவையில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. டக்கென்று சுதாரித்த பிரதமர் மோடி அந்த பெண்ணிடம் ஓ அச்சா என்று பதில் அளித்தார். பிரதமர் மோடியிடம் அந்த பெண் இல்லை சார் என்று பதில் கூறிய சம்பவம் வீடியோவாக இணையத்தில் வெளியாகி வைரலாகிக்கொண்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications