காசநோய் இல்லாத மாநிலமாக உத்தரப் பிரதேசம் விரைவில் மாறும்! முதல்வர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் கிராமங்களிலிருந்து காசநோயை முற்றிலுமாக அகற்ற பாஜக அரசு தயாராகி வருகிறது என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
மாநிலத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துகளை நோயற்ற கிராமமாக மாற்ற மாநில அரசு தயாராகி வரும் நிலையில், காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க நாங்கள் முயன்று வருகிறோம் என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "காசநோய் இல்லாத உத்தரப் பிரதேச கிராமங்களை உருவாக்க மாவட்ட காசநோய் அலுவலர் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து ராஜ் அதிகாரி (டிபிஆர்ஓ) ஆகியோரின் கூட்டு முயற்சியுடன் விரைவில் களத்தில் இம்முயற்சி செயல்படுத்தப்படும்.

அனைத்து தலைமை மருத்துவ அலுவலர்கள் மற்றும் மாவட்ட காசநோய் அதிகாரிகளுக்கு (டிடிஓ) சுகாதார இயக்குநர் ஜெனரல் உட்பட குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார். மேலும், காசநோய் இல்லாத ஊராட்சிகளை உருவாக்குவது குறித்து டிடிஓ மற்றும் டிபிஆர்ஓ மட்டங்களில் கூட்டங்கள் நடத்தப்படும் . காசநோய்க்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி பெற்ற பணியாளர்கள் பின்னர் அந்தந்த பகுதிகளில் உள்ள கிராம தலைவர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள்.
அதே நேரத்தில், மாவட்ட காசநோய் மையத்துடன் இணைந்து, காசநோய் இல்லாத நிலையை அடையத் தயார்ப்படுத்த பஞ்சாயத்துகள் நிர்வாகிகள் உதவுவார்கள். இந்த விழிப்புணர்வு கட்டத்தில், காசநோய் என்றால் என்ன? அதன் பல்வேறு அம்சங்கள், தடுப்பு உத்திகள், தவறான எண்ணங்கள், சிகிச்சையை முறையாக கடைப்பிடித்தலின் நன்மைகள் போன்றவை குறித்து விரிவாக விளக்கப்படும்.
அதேபோல மறுபுறம் மற்றொரு குழுவினர் கிராம பஞ்சாயத்துகளில் ஊடுருவி காசநோய் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குறித்த கணக்கெடுப்பை மேற்கொள்கொள்வார்கள். பின்னர் இவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கான சிகிச்சையை அளிப்பார்கள். இப்படியாக காசநோய் முழுமையாக ஒழிக்கப்படும்" என்று கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications