பெண்களுக்கான திட்டம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம்! நேரடியாக களத்திற்கு வந்த யோகி ஆதித்யநாத்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மிஷன் சக்தி திட்டத்தின் 4வது கட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த யோகி ஆதித்யநாத் சிறப்பு பொதுக்கூட்டங்களையும் பிரசாரங்களையும் மேற்கொள்கிறார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் மிஷன் சக்தி திட்டத்தின் 4ம் கட்டத்தை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து இந்த திட்டம் குறித்து பிரசாரம் மேற்கொள்ளவும் தொடங்கியுள்ளார். இன்று தொடங்கும் இந்த பிரசார பயணம் நவம்பர் 3ம் தேதி முடிவடைகிறது. மொத்தம் 12 பிரசார கூட்டங்களில் யோகி ஆதித்யநாத் பங்கேற்கிறார். இந்த மிஷன் சக்தி திட்டத்தின் மூலம் பெண்களுக்கு தற்காப்பு கற்பித்தல், அரசு திட்டங்களுடன் இணைத்தல், பெண்கள் தொடர்பான சட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு அரசு சார்பு திட்டங்களை பற்றி விவரிக்கப்படுகிறது.
எனவே இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் குறித்து தானே நேரடியாக பிரசாரம் மேற்கொள்கிறேன் என யோகி ஆதித்யநாத் முன்வந்திருக்கிறார். மட்டுமல்லாது நாடாளுமன்ற தேர்தலுக்கும் இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், இந்த பிரசாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications