உத்தரப் பிரதேசம் முழுவதும் பள்ளி கல்வி முழுமையாக தரம் உயர்த்தப்படும்! யோகி ஆதித்யநாத் அறிவிப்பு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பள்ளிக்கல்வியை மேம்படுத்த ஏற்கெனவே பல கட்ட திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், விரைவில் அதன் முழு பலன் தெரிய வரும் என்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவியேற்று 6 வருடங்கள் ஆகிறது. இதனை அம்மாநில அரசு சிறப்பாக கொண்டாடி வருகிறது. காரணம் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் மாநிலத்தின் முதலமைச்சராக பதவியில் இருந்தது கிடையாது. அந்த வகையில் யோகி புதிய சாதனையை படைத்திருக்கிறார். இந்நிலையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதில் அவர் தீவிரம் காட்டி வருகிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், "இதற்கு முன்னர் இருந்த அரசு மாஃபியாக்களை வளர்த்து அதன் மூலம் ஆட்சியை நடத்திக்கொண்டிருந்தது. ஆனால், தற்போதைய பாஜக அரசு மக்களுக்காக பணியாற்றுகிறது. அதனால்தான் முதலீட்டாளர்கள் நமது மாநிலத்தில் குவிந்துள்ளனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் லக்னோவில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. ஏனெனில் வழக்கமாக இந்த மாநாடு மும்பை அல்லது டெல்லியில்தான் நடக்கும். ஆனால் லக்னோவில் முதல் முறையாக நடத்தப்பட்டுள்ளது. இதற்கு பாஜக அரசுதான் காரணம்.
அதேபோல மறுபுறம் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. மட்டுமல்லாது இதுவரை இல்லாத அளவுக்கு பட்ஜெட் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. குறிப்பாக தொடக்க கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதாவது, இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் உள்ள 44 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள் 'நிபுன்' அந்தஸ்தை பெற்றிருக்க வேண்டும் என்பதுதான் இந்த உத்தரவு. 'நிபுன்' அந்தஸ்து என்றால், 3ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு முழுமையாக வழங்கியிருக்க வேண்டும் என்பதை தான் நிபுன் அந்தஸ்து என்று சொல்லப்படுகிறது.அதன்படி உத்தரப் பிரதேசத்தில் 75 நிபு தொகுதிகள் உருவாக்கப்படும். இந்த தொகுதிக்குள் 44 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள் அடங்கும்.
இதன் மூலம் எதிர்வரும் 2026-2027ம் ஆண்டிற்குள் அனைத்து மாணவர்களுக்கும் 3 வகுப்பில் முழுமையான எண்ணறிவும், எழுத்தறிவும் பெற்றிருப்பார்கள். இதற்கு சமக்ரா ஷிக்ஷாவின் மத்திய நிதியுதவி பயன்படுத்தப்படும். ஏற்கெனவே பள்ளிகளை மேம்மபடுத்த அமல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. விரைவில் அதன் முழு பலன் தெரிய வரும்" என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications