மாநில வளர்ச்சியில் சமரசம் கிடையாது! வளர்ச்சி திட்டங்களில் அதிரடி காட்டும் யோகி ஆதித்யநாத்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் ஏராளமான வளர்ச்சி திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருவதாகவும், மாநிலத்தின் வளர்ச்சியில் பாஜக எந்த சமரசமும் செய்யவில்லை எனவும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். வளர்ச்சி குறித்து பேசிய அவர், இதில் எவ்வித சமசரமும் கிடையாது என்று கூறியுள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு இன்று அயோத்தியில் சுமார் 25 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. இந்நிலையில் மாநிலத்தின் வளர்ச்சி குறித்து பேசிய அவர், "கடந்த 60 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு செய்யாத சாதனைகளை பாஜக அரசு செய்திருப்பதை எப்படி மறுக்க முடியாதோ அதேபோல இந்த 7 ஆண்டுகளில் உத்தரப் பிரதேசத்தில் பாஜக அரசு செய்துள்ள சாதனைகளையும் மறுக்க முடியாது. பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இங்கு மாஃபியாக்களின் ஆட்சிதான் நடந்துக்கொண்டிந்தது. மாஃபியாக்கள் தலையிடாத தொழில்களே இல்லை. அனைத்திலும் இவர்களின் ஆதிக்கம் நிறைந்திருந்தது.
ஆனால் இன்று, இந்த மாஃபியாக்கள் தங்கள் உயிருக்காக அரசாங்கத்திடம் மன்றாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் கழுத்துகளில் வழக்குப்பதிவின் விவரங்கள் அடங்கிய பலகைகளை மாட்டிக்கொண்டு திரிந்துக்கொண்டிருக்கிறார்கள். காவல்துறையினர் இவர்கள் மீதான பிடியை இறுக்கியிருக்கிறது. இந்த அரசு 'சப்கா சாத், சப்கா விகாஸ்' என்கிற தாரக மந்திரத்துடன் பயணித்துக்கொண்டிருக்கிறது. அதாவது நாங்கள் சமரசத்தை விட வளர்ச்சிக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு எங்கள் கொள்கையின் வெளிபாடுதான். இந்த மாநாட்டின் மூலம் சுமார் ரூ.35 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இந்த முதலீடுகள் மூலம் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உத்தரப் பிரதேசத்தை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளன. இந்த நிறுவனங்கள் சிறப்பாக செயல்படுவதற்கு மாநிலத்தின் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும்.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சரியாக சொல்வதெனில் முன்னெப்போதையும் விட இந்த பட்ஜெட் கூட்டத்தில் அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதன் காரணமான பெரும் நிறுவனங்கள் தங்கள் தொழிலை பெருக்க முடியும். அதேபோல சிறு குறு நிறுவனங்களும் பெருமளவு பயனடையும்" என்று கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications