“பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்புகின்றனர்!” யோகி ஆதித்யநாத் பேச்சு

Subscribe to Oneindia Tamil

லக்னோ: பாகிஸ்தான் தற்போது ஏறத்தாழ திவாலாகியுள்ளதால் அந்நாட்டுடன் இணைந்து இருக்க மக்கள் விரும்பவில்லை. எனவே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று வலுவான குரல்கள் எழுந்திருக்கின்றன என உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

அம்பேத்கர் நகரில் நேற்று ரூ.1,212 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு யோகி ஆதித்யநாத் அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். அதில் சிறப்புரையாற்றிய யோகி, "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) மக்கள் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகின்றனர். தற்போது பாகிஸ்தான் திவாலான நிலையில் இருக்கிறது. அந்நாட்டுடன் இணைந்து நிற்க யாரும் விரும்பவில்லை.

Yogi Adityanath has said that the people of Pakistan Occupied Kashmir want to merge with India

370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்படும் என்று யாரும் நினைக்கவில்லை. ஆனால் 2019ம் ஆண்டு அது நடந்தது. தற்போது காஷ்மீர் வேகமாக முன்னேறி வருகிறது. கடந்த 2019ம் ஆண்டுக்கு முன்னர் இருந்த வன்முறை தற்போது இல்லை. கடந்த 1952ம் ஆண்டு சியாமா பிரசாத் முகர்ஜி கூறிய வார்த்தைகள் முக்கியமானவையாகும். அதாவது பாரதத்திற்கு இரண்டு தலைவர்கள் இருக்க முடியாது, இரண்டு சட்டங்கள் இருக்க முடியாது என்று கூறியிருந்தார்.

அதற்காக அவர் உயிர் தியாகத்தையும் செய்தார். தற்போது அவருடைய கனவை பாஜக நிறைவேற்ற முயற்சித்து வருகிறது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகும் போது இந்த கனவு நிஜமாகும். பாரத்மாதாவின் உண்மையான மகனாக பிரதமர் மோடி உருவெடுப்பார். உலகம் முழுவதும் தற்போது நெருக்கடியில் இருக்கிறது. ஆனால் இந்தியா மட்டும் பிரகாசமாக இருக்கிறது. நெருக்கடிகளிலிருந்து மக்களை காக்கும் நாயகனாக மோடி உருவெடுத்திருக்கிறார்.

இங்கு நம்முடைய நாட்டில் சுமார் 80 கோடி மக்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்கிறது. ஆனால் பாகிஸ்தானில் இரண்டு வேளை உணவு என்பதே பெரிய சவாலாக இருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர்.. அதாவது கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் சுமார் 115 மாவட்டங்களில் நக்சல்கள் பரவியிருந்தனர். ஆனால் இது தற்போது 3-4 மாவட்டங்களுக்குள் சுருங்கியுள்ளது. இதற்கு காரணம் பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம்தான்" என்று யோகி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+