இனி உத்தரப் பிரதேசம் முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனைதான்! யோகி ஆதித்யநாத் அதிரடி அறிவிப்பு
லக்னோ: கிராம பஞ்சாயத்து அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்டுள்ள 'சமர்த் 2023' எனும் திட்டம் உத்தரப் பிரதேசம் முழுவதும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் 25ம் தேதி இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் இது கிராமப்புற பொருளாதாரங்களில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று யோகி ஆதித்யாநாத் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "உத்தரப் பிரதேசம் வரம்பற்ற சாத்தியக்கூறுகளைக் கொண்ட ஒரு மாநிலமாகும். இங்கு அனைத்து தொழில்கள் தொடங்குவதற்கும் சாத்தியங்கள் இருக்கின்றன.

இதனால் புதுப்புது திட்டங்கள்/கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. தற்போது ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும் தனிச் செயலகம் அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன, விரைவில் ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்துக்கும் தனிச் செயலகம் அமைக்கப்படும்.
செயலகம் வந்துவிட்டால் மக்கள் தங்கள் தேவைகளுக்காக மாவட்ட அல்லது மாநில தலைநகருக்கு வரவேண்டிய அவசியமில்லை. ஏனெனில் இந்த செயலகத்தில் கணினி ஆப்ரேட்டர்கள் இருப்பார்கள். இவர்கள் கிராம மக்களுக்கு தேவையான சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை வழங்குவார்கள். ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால் டிஜிட்டல் பரிவர்த்தனையை நோக்கி செல்ல வேண்டும். இந்த திட்டம் மூலம் கிராமப்புற பொருளாதாரம் மேம்படும் என்பதில் சந்தேகம் இருக்காது" என்று கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications