அனைத்து கிராமங்களுக்கும் தூய்மையான குடிநீர்! வாக்குறுதியை நிறைவேற்றிய உ.பி அரசு.. யோகி பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒவ்வொரு கிராமத்திற்கும் சுத்தமான குடிநீர் வழங்கும் இலக்கை மாநில அரசு எட்டியிருப்பதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், "இந்த அரசு 77வது சுதந்திர தினத்தை மறக்க முடியாத சுதந்திர தினமாக மாற்றுவதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது. அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள கிராம மக்களுக்கு தூய்மையான குடிநீர் கிடைப்பதை நாங்கள் நோக்கமாக கொண்டு செயல்பட தொடங்கினோம். இதன் விளைவாக . ஜல் ஜீவன் மிஷனின் ஹர் கர் ஜல் யோஜனாவின் கீழ் உத்தரப் பிரதேசத்தின் 9 கோடி கிராம மக்களுக்கு தூய்மையான குடிநீர் கிடைக்கப்பட்டுள்ளது.

இது தவிர இந்த 77வது சுதந்திர தினத்தன்று உ.பி.யின் கிராமப்புறங்களில் உள்ள 1.5 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு குழாய் நீர் விநியோகம் தொடங்கும். முந்தைய ஆட்சி காலத்தில் தண்ணீர் கிடைப்பதே பெரிய விஷயமாக இருந்தது. தண்ணீருக்காக கிராம மக்கள் நீண்ட தூரம் நடக்க வேண்டி இருந்தது. இருந்தாலும் அவர்களுக்கு தூய்மையான குடிநீர் கிடைக்கவில்லை. எனவே கிராம மக்கள் பெரும் துயரை எதிர்கொண்டிருந்தனர்.
ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் நிலைமை மெல்ல மாற்றம் கண்டது. நாங்கள் முதலில் தண்ணீரை ஏற்பாடு செய்தோம் பின்னர் இந்த தண்ணீரை குடிநீராக தரம் உயர்த்தினோம். இந்து உத்தரப் பிரதேசத்தில் பாதிக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கச் செய்திருக்கிறோம். கடந்த 4 ஆண்டுகளில், உ.பி.யில் உள்ள 56.83 சதவீத கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. நாங்கள் கொடுத்த வாக்குறுதியினை நிறைவேற்றியிருக்கிறோம்.
இந்த சுதந்திர தினம் கிராம மக்களுக்கு குடிநீரை உறுதி செய்ததற்காக சிறப்பாக கொண்டாடப்படும். இது போன்ற மாற்றங்கள் இதற்கு முன்னர் நடந்தது கிடையாது. பாஜக சாதனை செய்திருக்கிறது" என்று கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications