தொழிலதிபர்கள், முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை உ.பி உருவாக்கியுள்ளது! முதல்வர் யோகி பெருமிதம்
லக்னோ: தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை உத்தரப் பிரதேசம் வழங்கியுள்ளது என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பேசிய அவர் "உத்தரப் பிரதேசத்தை வலுவான பொருளாதார மாநிலமாக மாற்றியிருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், "குற்றவாளிகளுக்கு எதிரான மாநில அரசின் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கை நாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டு. தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை உத்தரப் பிரதேசம் வழங்கியுள்ளது. ஐடிஐ மற்றும் தொழில்முறை கல்லூரிகளில் உள்ள மாணவர்களை இன்டர்ன் ஆக வேலைக்கு அமர்த்துமாறு தொழிலதிபர்களை கேட்டுக்கொள்கிறேன். உத்தரப் பிரதேசம் ஒரு காலத்தில் வறுமையும், குற்ற செயல்கள் நிரம்பிய மாநிலமாக இருந்தது. தற்போது இந்த நிலை மாறியிருக்கிறது.
ஒருபுறம் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பையும், மறுபுறம் மாணவர்களுக்கான கல்வியையும் மாநில அரசு மேம்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் உள்ள 44 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள் 'நிபுன்' அந்தஸ்தை பெற்றிருக்க வேண்டும் என ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளேன். 'நிபுன்' அந்தஸ்து என்றால், 3ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு முழுமையாக வழங்கியிருக்க வேண்டும் என்பதை தான் நிபுன் அந்தஸ்து என்று சொல்லப்படுகிறது.அதன்படி உத்தரப் பிரதேசத்தில் 75 நிபு தொகுதிகள் உருவாக்கப்படும். இந்த தொகுதிக்குள் 44 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள் அடங்கும்" என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications