உத்தரப் பிரதேச பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கும் புதிய திட்டம்! மாஸ் காட்டும் யோகி ஆதித்யநாத்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேசம் 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி வேகமாக முன்னேறி வருவதாக கூறியுள்ள முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், இதற்கு ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு எனும் திட்டம் சிறப்பாக கைகொடுப்பதாக கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைந்ததிலிருந்து மாநிலம் சிறப்பான வளர்ச்சியை கண்டு வருகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் இரட்டை என்ஜின் ஆட்சி, மாநிலத்தின் வளர்ச்சியை தீவிரப்படுத்தியுள்ளது. நாங்கள் ஆட்சியை கைப்பற்றியபோது பொருளாதார வளர்ச்சியில் உ.பி 6வது இடத்தில் இருந்தது. ஆனால் தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

Yogi Adityanath is proud to say that one district one production plan to the economic development of UP

நாங்கள் கிராமங்களை வளர்ச்சியின் பாதையில் இணைத்திருக்கிறோம். கிராமங்களின் உற்பத்தி பொருட்கள் வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. இதன் மூலம் இந்த மாநிலம் விரைவில் ஒரு ட்ரில்லியன் பொருளாதார வளர்ச்சியை விரைவில் எட்டிவிடும். நமது பக்கத்து நாடான பாகிஸ்தானை பாருங்கள். அங்கு உணவு பற்றாக்குறை நிலவி வருகிறது. ஆனால் கடந்த 9 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார்.

குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் அவர் ஏராளமான திட்டங்களை தொடங்கி வைத்திருக்கிறார். அதில் முக்கியமானது ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு திட்டம். இந்த திட்டத்தின் மூலம் உத்தரப் பிரதேசத்தின் தனி சிறப்பு மிக்க பொருட்கள் தேசிய அளவில் கவனம் பெற்றிருக்கின்றன. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த திட்டம் கைகொடுத்திருக்கிறது. இந்நிலையில் அடுத்த மாதம் சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெறும் உலக பொருளாதார மன்ற கூட்டத்தில், உ.பியிலிருந்து ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட பொருட்கள் இடம்பெற்றிருக்கும்" என்று கூறியுள்ளார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+