ரூ.5000 ‛டிஸ்கவுண்ட்’.. அக்.31க்குள் சொத்து வரி கட்டினால் ஆஃபர் - 5% தள்ளுபடி தந்த மதுரை மாநகராட்சி
மதுரை: மதுரையில் 31.10.2024ம் தேதிக்குள் சொத்து வரி கட்டுவோருக்கு 5 சதவீதம் வரை அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் தள்ளுபடி செய்யப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்டவற்றின் நிர்வாகங்கள் என்பது மக்கள் செலுத்தும் வரிப்பணத்தை நம்பியே உள்ளது. ஆனால் மக்கள் ஆண்டுதோறும் வரியை முறையாக செலுத்துகிறார்களா? என்றால் அது கேள்விக்குறித்தான்.

அதாவது ஒரு தரப்பினர் வரியை ஒவ்வொரு முறையும் முறையாக செலுத்திவிடுகிறார்கள். ஆனால் இன்னொரு தரப்பு வரி செலுத்துவது இல்லை. இப்படி வரி செலுத்தாமல் இருப்பது சொத்து உரிமையாளர்களுக்கு அபராதத்துக்கு வழிவகுக்கும். அதேபோல் உள்ளாட்சி அமைப்புகளையும் நிதி நெருக்கடியில் தள்ளும்.
இதனால் தான் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாநகராட்சிகளும் சொத்து வரி வசூலிக்கும்போது அதனை அனைத்து மக்களும் குறிப்பிட்ட தேதிக்குள் கட்டுவதற்கான சலுகைகளை அறிவிக்கின்றன. ஏனென்றால் சொத்து வரி தான் ஒரு மாநகராட்சிக்கு நல்ல வருவாயை ஈட்டி கொடுக்கும். அந்த வகையில் தான் தற்போது மதுரை மாநகராட்சி இன்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் ஆஃபர்! இன்றே சொத்து வரி கட்டினால் 5 சதவீதம் தள்ளுபடி! ரூ 5000 மிச்சம்!
இதுதொடர்பாக மதுரை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், ‛‛மதுரை மாநகராட்சிக்கு 2024-2025ம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரியினை 31.10.2024 தேதிக்குள் செலுத்தும் சொத்து வரி உரிமையாளர்களுக்கு சொத்து வரி தொகையில் 5 சதவீதம் (அதிகபட்சமாக ரூ.5,000) தள்ளுபடி வழங்கப்படும். எனவே பொதுமக்கள் வருகின்ற 31.10.2024ம் தேதிக்குள் சொத்து வரியினை செலுத்தி பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்து வரியை பொறுத்தமட்டில் முதல் அரையாண்டு, இரண்டாவது அரையாண்டு என்று தனித்தனியே வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில் முதல் அரையாண்டு என்பது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரையிலான 6 மாதங்களை குறிக்கும். இரண்டாவது அரையாண்டு என்பது அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரையிலான 6 மாதத்தை குறிக்கும்.
இதில் அரையாண்டு தொடங்கும் முதல் 30 நாட்களில் சொத்து வரி செலுத்துவோருக்கு தான் 5 சதவீதம் வரை அல்லது அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை தள்ளுபடி என்பது வழங்கப்படுகிறது. தற்போது 2வது அரையாண்டு தொடங்கி உள்ளது. இதில் முதல் 30 நாட்களை மனதில் வைத்து மதுரை மாநகராட்சி சொத்து வரிக்கான தள்ளுபடி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications