சென்னை மாநகராட்சியின் ஆஃபர்! இன்றே சொத்து வரி கட்டினால் 5 சதவீதம் தள்ளுபடி! ரூ 5000 மிச்சம்!
சென்னை: சென்னை மாநகராட்சியில் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தி 5 சதவீதம் தள்ளுபடி பெறலாம் என மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சென்னை மாநகராட்சி வருவாயில் சொத்து வரி முதன்மையானது. சென்னையில் உள்ள 13 லட்சத்து 31 ஆயிரம் சொத்து உரிமையாளர்களிடம் இருந்து அரையாண்டுக்கு தலா ரூ 850 கோடி என ஆண்டுக்கு ரூ 1700 கோடி வரி வருவாய் கிடைக்கும். மாநகராட்சியின் வளர்ச்சி பணிகளில் பொதுமக்களின் பங்களிப்புதான் சொத்து வரி. இந்த அரையாண்டுக்கான வரி ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு வசூலிக்கப்படுகிறது.

மாநகராட்சியில் உள்ள சொத்து உரிமையாளர்கள், ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதிக்குள் முதல் அரையாண்டுக்கான சொத்து வரி, அக்டோபர் மாதம் 30ஆம் தேதிக்குள் 2-ஆவது அரையாண்டுக்கான சொத்து வரியைச் செலுத்த வேண்டும்.
இந்த காலகட்டத்திற்குள் செலுத்தினால் மாநகராட்சி சார்பில் சொத்து வரியில் 5 சதவீதம், அதிகபட்சம் ரூ 5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படும். அதன் பிறகு செலுத்தப்படும் சொத்து வரிக்கு ஒரு சதவீதம் தனி வட்டி விதிக்கப்படும் என்று மாநகராட்சி வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை வசூலிக்கப்படுகிறது.
நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாதோர் பட்டியலை https://chennaicorporation.gov.in/gcc/propertytax_revision என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை வரை 5 சதவீதம் தள்ளுபடியில் ரூ 330 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications