பாலமேடு ஜல்லிக்கட்டு.. சீருடை மாற்றி களமிறங்கிய 8 பேர்.. தகுதிநீக்கம் செய்து நடவடிக்கை!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மாட்டு பொங்கல் தினத்தையொட்டி மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 2 சுற்றுகள் முடிவடைந்து, 200க்கும் அதிகமான மாடுகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. இதனிடையே பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டம் செய்ததாக 8 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பொங்கல் பண்டிகைகளும் ஜல்லிக்கட்டு போட்டிகளும் தமிழர்களால் பிரித்து பார்க்க முடியாதது. குறிப்பாக மரபு மாறா மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாடு முழுவதும் இருந்தும் காளைகள் கொண்டு வரப்படும்.

மதுரையில் நடைபெறும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்று வாடிவாசலில் காளை செய்யும் சம்பவங்கள் காலம் முழுக்க நின்று பேசும். நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி முடிவடைந்த நிலையில், இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியுள்ளது.

பாலமேடு ஜல்லிக்கட்டு

பாலமேடு ஜல்லிக்கட்டு

முதலில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றுள்ள மாடுபிடி வீரர்களுக்கான உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் வாசிக்க மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். இதனைதொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வரும் காளைகள் அடக்கும் பணியில் காளையர்கள் ஈடுபட்டுள்ளனர்.

2 சுற்றுகள் முடிவு

2 சுற்றுகள் முடிவு

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் சுற்று முடிவில் 92 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டது. அதேபோல் இரண்டாவது சுற்றில் 100க்கும் அதிகமான காளைகள் அவிழ்த்துவிடப்பட்டது. முதல் இரு சுற்றுகளின் முடிவில் 9 காளைகளை அடக்கிய ராஜா மற்றும் மணி ஆகிய இளைஞர்கள் அதிக காளைகளை அடக்கிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்கள்.

 மாடுபிடி வீரர்கள் காயம்

மாடுபிடி வீரர்கள் காயம்

அதேபோல் 8 காளைகளை அடக்கிய அரவிந்த் 2வது இடத்திலும், 6 காளைகளை அடக்கிய வாஞ்சிநாதன் 3வது இடத்திலும் இருக்கிறார். அதிக காளைகளை அடக்கும் மாடுபிடி வீரருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. அதேபோல் 2ம் சுற்று முடிவில் மாடுபிடி வீரர்கள் ஏராளமானோர் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

8 பேர் தகுதிநீக்கம்

8 பேர் தகுதிநீக்கம்

இதனிடையே பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரர்கள், முன்பதிவு செய்திருக்க வேண்டும். அப்படி முன்பதிவு செய்யாமல், மாவட்ட நிர்வாகத்தின் டீ ஷர்ட் அணிந்து ஜல்லிக்கட்டில் சில இளைஞர்கள் பங்கேற்றனர். கிட்டத்தட்ட ஆள்மாறாட்டம் செய்து களமிறங்கிய 8 வீரர்களை மாவட்ட நிர்வாகம் கண்டறிந்து, வெளியேற்றியுள்ளது. அதன்பின்னர் 8 பேரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+