ஆளுநர் ரவி விவகாரம்..தீக்குளிப்போம்.. திமுக நிர்வாகி பரபர போஸ்டர்.. மதுரையில் சலசலப்பு
மதுரை: ஆளுநர் ஆர்.என்.ரவியை வரும் 27ம் தேதிக்குள் மாற்றம் செய்யாவிட்டால், தீ குளித்து உயிரை மாய்த்துக் கொள்வேன் என மதுரையில் திமுக நிர்வாகி ஒருவர் ஒட்டியுள்ள போஸ்டர் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் திமுக நிர்வாகியின் போஸ்டரால் மதுரை நகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆளுநர் ரவிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது. சனாதனத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பது, திராவிட மாடல் தொடர்பாக கேள்வியெழுப்புவது, திருக்குறளின் ஜி.யு.போப் மொழிபெயர்ப்பை விமர்சித்திருந்தது, தமிழ்நாடு-தமிழகம் சர்ச்சை, கார்ல் மார்க்ஸ் மீதான விமர்சனம், அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் என அவர் பேசிய விஷயங்கள் அனைத்திற்கும் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளுக்கிடையே எதிர்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்டம்: "இந்திய அரசியலமைப்பு சட்டம் கூறும் அனைத்து அம்சங்களும் ராம ராஜ்ஜியத்தில் இருந்துள்ளன. அனைவருக்கும் அனைத்தும் என்பது ராம ராஜ்ஜியத்தின் சாரம். 1976ம் ஆண்டுதான் இந்தியாவில் மதச்சார்பின்மை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கருத்தியல் வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்டதுதான். இந்தியாவை பொறுத்த அளவில் மதச்சார்பின்மை என்பது அனைத்து மதங்களையும் சரி சமமாக மதிப்பது என்பதுதான்" என ஆளுநர் ரவி கூறியிருந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
திருக்குறள்: அதேபோல, திருக்குறளை ஆங்கிலத்தில் ஜி.யு.போப் சரியாக மொழிபெயர்க்கவில்லை. இந்த மொழி பெயர்ப்பில் ஆன்மா இல்லை என்று ஆளுநர் ரவி கூறிய கருத்து தமிழறிஞர்களிடையே போராட்டத்தை தூண்டியது. இதற்கெல்லாம் உச்சமாக அமைந்ததுதான் தமிழகம்-தமிழ்நாடு பிரச்னை. அதாவது தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பதே பொருத்தமானது என்று அவர் கூறியபோது ஏறத்தாழ அனைத்து கட்சிகளும் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் குதித்தன.
கார்ல் மார்க்ஸ்: இதனையடுத்து கார்ல் மார்க்ஸின் தத்துவம் இந்தியாவின் வளர்ச்சி பாதையில் தாக்கத்தை ஏற்படுத்தின என்று ஆளுநர் ரவி கூறியிருந்தார். இதற்கு எதிராக இடதுசாரிகள் போராட்டத்தில் குதித்தனர்.
ஆளுநர் வெளியேற்றம்: இந்த மோதல் போக்கின் உச்சம்தான் சட்டப்பேரவையிலிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறிய சம்பவம். இப்படியாக தொடர்ந்து இவர் பேசிய கருத்துக்கள் அனைத்தும் அடிக்கடி சர்ச்சையாக வெடித்து வருகிறது. இதனை தொடர்ந்து சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. இதற்கு பின்னர் செந்தில் பாலாஜி இலாக இல்லாத அமைச்சாரக தொடர வேண்டும் என்றும், அவர் வகித்து வந்த இலாகாக்களை மற்ற அமைச்சர்களுக்கு மாற்றியும் உத்தரவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ரவிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதில் இரண்டாவது பரிந்துரையை ஏற்றுக்கொண்ட ஆளுநர், செந்தில் பாலாஜி இலாக இல்லா அமைச்சராக தொடர்வார் என்பதை ஏற்க மறுத்துவிட்டார். இது தமிழக அரசியலில் மற்றொரு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆளுநரின் இந்த முடிவுக்கு திமுக மட்டுமல்லாது, அதன் கூட்டணி கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. இப்படியாக ஆளுநருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் ஆளுநரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜூன் 27ம் தேதிக்குள் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்றம் செய்யாவிட்டால், தீ குளித்து உயிரை மாய்த்துக் கொள்வேன் என மதுரையில் திமுக நிர்வாகி கணேசன் என்பவர் போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார். நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரால் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications