ஜிகர்தண்டா “அசால்ட் சேது” பாதி.. படையப்பா சூர்யபிரகாஷ் மீதி! டாக்டர் + நடிகர் + அரசியல்வாதி = சரவணன்

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான மருத்துவர் சரவணன் இன்று தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். பாஜகவிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன் விலகிய சரவணன் தற்போது அதிமுகவில் இணைந்திருக்கும் அவரது அரசியல் மற்றும் தனிப்பட்ட செயல்பாடுகள் குறித்து பார்ப்போம்.

மதுரை மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் சரவணன் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று திமுக சட்டமன்ற உறுப்பினராக வலம் வந்தவர்.

இந்த நிலையில் 2021 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு கிடைக்காது என்பதை முன்கூட்டியே அறிந்த மருத்துவர் சரவணன், உடனே பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவரது அரசியல் பயணம் ரோலர் கோஸ்டரை போன்றது.

மருத்துவர் சரவணன்

மருத்துவர் சரவணன்

பெரும்பாலான மக்களுக்கு அரசியல்வாதியாக மட்டுமே அறிமுகமான சரவணன், தொழில் ரீதியாக ஒரு மருத்துவர் ஆவார். மதுரை நரிமேட்டில் தனது பெயரிலேயே இவர் சொந்தமாக மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். அந்த மருத்துவமனையில் ஏழை மற்றும் எளிய மக்களுக்காக இலவச சிகிச்சையை அவர் வழங்கி வருவதாக கூறப்படுகிறது.

 அரசியல்வாதி சரவணன்

அரசியல்வாதி சரவணன்

இதனால் மதுரை மக்கள் மத்தியில் பிரபலமான சரவணனுக்கு அரசியல் ஆசையும் எட்டிப்பார்த்தது. தொடக்கத்தில் மருதுபாண்டியர் பேரவையில் இணைந்து செயல்பட்டு வந்த அவர், மதுரை திமுகவில் கலக்கிய முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரியின் ஆதரவாளராக திமுகவில் செயல்பட்டு வந்தார்.

மதிமுக சரவணன்

மதிமுக சரவணன்

இதனை தொடர்ந்து வைகோ தலைமையில் மதிமுகவில் இணைந்த டாக்டர் சரவணன், மதுரை புறநகர் மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த அவர், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜகவில் இணைந்து செயல்பட்டு வந்தார்.

திமுக சரவணன்

திமுக சரவணன்

இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்த டாக்டர் சரவணனுக்கு மருத்துவ அணி துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. 2017 திருப்பரங்குன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பும் அவருக்கு தரப்பட்டது. அதில் சரவணன் தோல்வியடைந்த நிலையில், 2019 ஆம் அண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.

பாஜக சரவணன்

பாஜக சரவணன்

இதனை தொடர்ந்து எல்.முருகன் தலைமையில் 2021 தேர்தலுக்கு முன்பாக மீண்டும் பாஜகவில் ஐக்கியமான சரவணன்தான், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்ட விவகாரத்தில் முக்கிய காரணமாக கூறப்பட்டார். இதில் சரவணனை காவல்துறை கைது செய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் பேசப்பட்டது.

அதிமுக சரவணன்

அதிமுக சரவணன்

இந்த சூழலில் அதே நாள் இரவு பிடிஆரை சந்தித்து பேசிய அவர், பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அப்போது அவர் திமுக கரை வேஷ்டியுடன் காணப்பட்டார். மீண்டும் திமுகவில் தன்னை சேர்த்துக்கொள்ளுமாறு அவர் விடுத்த கோரிக்கையை கட்சித் தலைமை ஏற்காத நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்த அதிமுகவில் இணைந்து உள்ளார்.

நடிகர் சரவணன்

நடிகர் சரவணன்

சரவணன் டாக்டர், அரசியல்வாதி என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். அவர் நடிகரும் கூட. ஆம், கடந்த 2012 ஆம் ஆண்டு அகிலன் என்ற படத்தில் நடித்து டூயட் பாடினார். ஆனால், அந்த படம் ஃப்ளாப் ஆனது. திரையரங்குகளில் மக்கள் கூட்டத்தை காட்ட ஜிகர்தண்டா படத்தில் ரவுடியாக அசால்ட் சேது சினிமாவில் நடித்து டிக்கெட்டுகள் விநியோகித்ததைபோல் இவரும் விநியோகித்ததாக மதுரையில் பேச்சுக்கள் அடிபட்டன.

தயாரிப்பாளர் சரவணன்

தயாரிப்பாளர் சரவணன்


அதேபோல், இவர் சில திரைப்படங்களையும் தயாரித்து உள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படையப்பா படத்தில் வரும் நாசரின் சூர்யபிரகாஷ் கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது. அடிக்கடி கட்சி தாவி, துண்டு நிறத்தையும், கரை வேட்டியையும் மாற்றிக்கொண்டே இருப்பார். சரவணனின் செயல்பாடுகளை பார்க்கையில் ஜிகர்தண்டா அசால்ட் சேது பாதி, படையப்பா சூர்யபிரகாஷ் பாதி என்றே புரிந்துகொள்ள முடிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+