சூரியின் உணவகம் காரணமல்ல.. மதுரை மருத்துவமனையில் இலவச உணவுக்கு கட்டுப்பாடு ஏன்? வக்கீல் விளக்கம்
மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தன்னார்வலர்கள் இலவச உணவு வழங்க நிபந்தனைகள் விதிக்கப்பட்டதற்கு மருத்துவமனை வளாகத்தில் உள்ள நடிகர் சூரியின் அம்மன் உணவகம் தான் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு நடிகர் சூரியின் அம்மன் உணவக நிர்வாகம் தரப்பில் அதன் வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார். அதுமட்டுமின்றி பொய்யான தகவல்களை பரப்பினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் அரசு ராஜாஜி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் மதுரை மட்டுமின்றி தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொதுவாக அரசு மருத்துவமனைகளில் ஏழை, எளிய மக்கள் தான் அதிகமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை என்பது தென்மாவட்டங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கான சிகிச்சை வழங்குவதில் முக்கிய பங்காற்றி வருகிறது.
இந்த மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் இருக்கும் குடும்பத்தினருக்கு பல்வேறு தன்னார்வ தொண்டு அமைப்பினர் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதனை சமூக சேவையாக தன்னார்வலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதன்மூலம் மருத்துவமனைக்கு வரும் ஏழை மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
மருத்துவமனை அருகே உள்ள ஹோட்டல்களில் அவர்கள் சாப்பிட்டால் பணம் செலவாகும். இதனால் அவர்கள் தன்னார்வலர்கள் வழங்கும் உணவை வாங்கி சாப்பிட்டு வந்தனர். இந்நிலையில் தான் கடந்த 30ம் தேதி மருத்துவமனைக்கு உணவு வழங்க வந்த தன்னார்வலர்களுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் சிரமத்தை எதிர்கொண்டனர்.

இதுதொடர்பாக அங்கிருந்தவர்கள் கூறுகையில், ‛‛மருத்துவமனை வளாகத்தில் நடிகர் சூரியின் அம்மன் உணவகம் உள்ளது. தன்னார்வலர்கள் வழங்கும் உணவால் இந்த உணவகத்தில் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. இதனால் அம்மன் உணவகத்தின் தலையிட்டால் தான் தன்னார்வலர்கள் உணவு வழங்க தடை விதிக்கப்படுகிறது’’ என்று பரபரப்பாக குற்றம்சாட்டினர்.
நடிகர் சூரி உணவகமா இப்படி? மதுரை ராஜாஜி மருத்துவமனையில் உணவு வழங்க தன்னார்வலர்களுக்கு தடை! கொதிப்பு
இந்த குற்றச்சாட்டுக்கு தான் தற்போது நடிகர் சூரியின் அம்மன் உணவகத்தின் வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார். அதுமட்டுமின்றி நடிகர் சூரியின் அம்மன் உணவகம் மீதான குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: ‛‛ 2, 3 நாட்களாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. மதுரை அரசு மருத்துவமனையில் 170 நாட்களாக ஒரு என்ஜிஓ உணவுகள் வழங்கி வருகிறது. அதனை முதலில் நாங்கள் வரவேற்கிறோம்.
நாங்களே சேவை மனப்பான்மையுடன் தான் மருத்துவமனை அலுவலகத்தில் உணவகம் நடத்தி வருகிறோம். பிற இடங்களில் உள்ள அம்மன் உணவகத்துக்கு இந்த அம்மன் உணவகத்துக்கும் இடையே விலை வித்தியாசம் உள்ளது. இங்கு விலை குறைவாக தான் விற்பனை செய்து வருகிறோம். சேவை மனப்பான்மையுடன் தான் உணவு வழங்கி வருகிறோம். குறைந்த விலையில் நல்ல தரமாக உணவு கொடுக்கிறோம்.
இந்நிலையில் தான் என்ஜிஓ சார்பில் வழங்கப்படும் உணவுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்தது. இதுபற்றி நாங்கள் விசாரித்தோம். அப்போது ஒரு தகவல் கிடைத்தது. அதாவது கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். மருத்துவ மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது.
இதையொட்டியே வெளி வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தான் என்ஜிஓவுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்ஜிஓ மீண்டும் உணவு வழங்க வேண்டும் என்றால் அதற்கான முறையாக மருத்துவமனை அனுமதியை பெற்று உணவு வழங்கலாம். அதற்கு நாங்களும் சப்போர்ட் செய்வோம். இந்த விஷயத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் எங்கள் உணவகம் மருத்துவமனை வளாகத்தில் இருப்பதால்தான் இலவச உணவு வழங்குவதை தடுப்பதாக பொய்யான செய்தி பரவுகிறது. இனியும் அப்படி பரப்பினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்போம்'' என தெரிவித்துள்ளார்.
அதாவது கடந்த மாதம் 9 ம் தேதி அதிகாலையில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவமனையில் 31 வயது நிரம்பிய பயிற்சி பெண் டாக்டர் பணியை முடித்து தூங்கினார். அப்போது மருத்துவமனையில் நுழைந்த சஞ்சய் ராய் அவரை பலாத்காரம் செய்து படுகொலை செய்தார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி உள்ளது. மருத்துவமனையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாதது தான் இந்த சம்பவத்துக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
இதற்கிடையே நாடு முழுவதும் பணியாற்றும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று நாடு முழுவதும் கடந்த மாதம் டாக்டர்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை தொடர்ந்து மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனை தான் நடிகர் சூரியின் அம்மன் உணவகத்தின் வழக்கறிஞர் சுட்டிக்காட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications