பெரிய அவமானமாகிடுங்க! லாபி செய்த ஓபிஎஸ்.. மதுரை மாநாட்டை புறக்கணிக்கும் முக்குலத்தோர்? எடப்பாடி ஷாக்
மதுரை: மதுரையில் நடக்கும் அதிமுக பொதுக்கூட்டத்தை பல்வேறு முக்குலத்தோர் அமைப்புகள் இன்று புறக்கணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக பொதுக்குழு வழக்கில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் ஒருவழியாக எடப்பாடி பழனிசாமி வென்றுள்ளார். யாராவது தலைவர் ஆனால் போதும் சண்டை போடுவதை நிறுத்துங்கள் என்று தொண்டர்களே சொல்லும் அளவிற்கு இத்தனை காலமாக நடந்து வந்த சண்டை ஒரு வழியாக முடிவிற்கு வந்து உள்ளது.

இந்த நிலையில்தான் திமுகவின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் இன்று மதுரையில் நடைபெறுகிறது. இன்று காலை கொடியேற்றி கூட்டத்தை தொடங்கி வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் ஆன பின் நடக்கும் முதல் பெரிய பொதுக்கூட்டம் இது. மதுரை ரிங்ரோடு பகுதியில் இந்த கூட்டம். நடக்கிறது. கிட்டத்தட்ட 63 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
முக்குலத்தோர் எதிர்ப்பு: இந்த நிலையில்தான் மதுரையில் நடக்கும் அதிமுக பொதுக்கூட்டத்தை பல்வேறு முக்குலத்தோர் அமைப்புகள் இன்று புறக்கணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு முக்குலத்தோர் அமைப்புகளான தென்னாட்டு மக்கள் கட்சி, பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கம், முக்குலத்தோர் எழுச்சி கழகம், பசும்பொன் தேசிய கழகம், முக்குலத்தோர் தேசிய கழகம் உள்ளிட்ட அமைப்பினர் இந்த பொதுக்கூட்டத்தை எதிர்க்க உள்ளனர்.
இந்த நிலையில்தான் இந்த நிலையில் அதிமுக சார்பாக மதுரையில் எடப்பாடி பழனிசாமி மாநாட்டை சீர்குலைப்பதற்கான ஏற்பாடுகளை ஓ பன்னீர்செல்வம் தீவிரமாக செய்து வருகிறாராம். அதன்படி எடப்பாடி பழனிசாமியின் இந்த மதுரை மாநாட்டிற்கு செக் வைக்க ஓ பன்னீர்செல்வம் -டிடிவி தினகரன் ஆகியோர் முக்கிய திட்டம் ஒன்றை வகுத்து உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி மதுரை மாநாட்டிற்கு முக்குலத்தோர் பிரிவினர் செல்ல கூடாது என்று லாபி செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள உள்ளார்களாம்.
முக்கியமாக எடப்பாடி பழனிசாமி முக்குலத்தோருக்கு மதிப்பு கொடுக்கவில்லை. மேற்கு மண்டல ஜாதியினருக்கு மட்டும் ஆதரவு கொடுக்கிறார். ஓபிஎஸ் - சசிகலா - டிடிவி ஆகியோரை ஓரம்கட்டிவிட்டார். ஆர் பி உதயகுமாரை மட்டுமே வைத்துள்ளார். அவர் நடத்தும் மாநாட்டிற்கு செல்ல கூடாது என்று என்று லாபி செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நீங்கள் சென்றால் அது நம்முடைய குலத்திற்கே இலுக்காக இருக்கும். அப்படி செய்ய வேண்டாம். அவர் தேவர் சிலைக்கு மரியாதை செய்வார். தேவருக்கு பூஜை செய்வார். இதெல்லாம் சின்ன சின்ன ஸ்டண்ட். இதை எல்லாம் பார்த்து ஏமாற்றம் அடைய வேண்டாம். அவர் அதிகார ரீதியாக தேவர்கள், முக்குலத்தோர் யாரையும் தனக்கு பக்கத்திலேயே வைக்கவில்லை. அதனால் அவருக்கு ஆதரவு தருவது வேஸ்ட் என்று ஓபிஎஸ் சொல்லி வருகிறாராம்.
இதற்காக முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர்களை சந்தித்து ஓ பன்னீர்செல்வம் ஆலோசனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
மதுரை ஏன்? : இந்த பொதுக்கூட்டத்தை அவர் மதுரையில் நடத்தவும் முக்கியமான ஒரு காரணம் உள்ளதாம். எடப்பாடி என்றால் கொங்கு மண்டல தலைவர் என்ற இமேஜ் இருக்கிறது. அதை உடைக்க எடப்பாடி நினைக்கிறாராம். தேவர் சமுதாயம்: முக்குலத்தோர் அபிமானத்தை பெறும் விதமாக மதுரையில் எடப்பாடி கூட்டத்தை நடத்த உள்ளார் என்கிறார்கள்.
ஓ பன்னீர்செல்வம் காரணமாக முக்குலத்தோர் அப்செட் ஆக கூடாது என்பதற்காக இந்த கூட்டத்தை அவர் நடத்த வாய்ப்பு உள்ளது. ஆர்பி உதயகுமார் ஏற்பாட்டில் இந்த கூட்டம் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஓ பன்னீர்செல்வம் மட்டுமின்றி திமுக, பாஜகவும் திரும்பி பார்க்கும் அளவிற்கு இந்த கூட்டம் இருக்க போகிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அதிமுக தனது கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாகவும் முக்குலத்தோர் அபிமானத்தை பெறும் விதமாக மதுரையில் எடப்பாடி கூட்டத்தை நடத்த உள்ளார் என்கிறார்கள். முக்கியமாக முக்குலத்தோர் ஜாதியினரை ஓ பன்னீர்செல்வத்திடம் இருந்து பிரித்து தங்களிடம் கொண்டு வர இவர்கள் திட்டமிட்டு உள்ளனராம்.












Click it and Unblock the Notifications