பாஜக+அதிமுக கூட்டணி? நல்லாதான் இருக்கும்..படி தாண்டிய ‘பத்தினி’ அவர்! செல்லூர் ராஜு காரசார விமர்சனம்
மதுரை : வளர்ந்து வருகிற பாஜக அதிமுகவுடன் இணைந்தால் நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் எனவும், படி தாண்டிய பத்தினியாக கோவை செல்வராஜ் உள்ளார். அவர் எத்தனையோ கட்சிகளுக்கு தாவி விட்டார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
அதிமுகவின் அதிகாரம் மிக்க பதவியான பொதுச் செயலாளர் பதவியை வகித்து வந்த ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு பல அரசியல் அதிரடிகள் அரங்கேறி வருகின்றன. ஜெயலலிதாவின் கண்ணசைவுக்கு ராணுவ கட்டுப்பாட்டோடு இயங்கி வந்த இயக்கம் தற்போது பல அணிகளாக சிதறுண்டு கிடக்கிறது. '
அதில் சசிகலா டிடிவி தினகரன் ஓபிஎஸ் இபிஎஸ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். சசிகலா தொடர்ந்து அரசியல் அதிரடி காட்டாமல் மிகுந்த அமைதியாகவே இருக்கிறார்.
போச்சே.. நூலிழையில் 8 தொகுதியில் தோற்ற பாஜக..இமாச்சலில் மாறிப்போன ரிசல்ட்.. ‛கை’க்கு அதிர்ஷ்டம்!

கோவை செல்வராஜ்
சசிகலாவும் டிடிவி தினகரன் இரு வேறு கருத்துக்களை கூறிவரும் நிலையில் அதிமுக என்றாலே ஓபிஎஸ் இபிஎஸ் மோதல் தான் என்று ஆகிவிட்டது. இடையில் இருவரது தரப்பையும் சேர்ந்த சில மூத்த முன்னாள் நிர்வாகிகள் திடீரென திமுக பாஜக தரப்புக்கும் தாவி வருகின்றனர். மூன்றாம் கட்ட நிர்வாகிகள் அடிக்கடி வேறு கட்சிகளுக்கு செல்வதும் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் தான் ஓபிஎஸ் இபிஎஸ் விவகாரத்தில் கோவை செல்வராஜ் தாவல் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இபிஎஸ்க்கு இடைஞ்சல்
ஆரம்பத்தில் இருந்தே ஓ.பன்னீர்செல்வத்தின் மிக முக்கிய தளபதிகளில் ஒருவராக இருந்த கோவை செல்வராஜ் திடீரென ஓபிஎஸ் அணியில் இருந்தும் அதிமுகவில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். கோவை அரசியலைப் பொறுத்தவரை எடப்பாடி பழனிச்சாமியின் வலதுகரம் போல செயல்பட்டு வந்த வேலுமணிக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பில் அரசியல் செய்து வந்தவர் கோவை செல்வராஜ் அவருக்கு எதிரான மனநிலை கொண்டவர்கள் ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாடு எடுப்பதற்கு காரணமாக கோவை செல்வராஜ் இருந்தார். மேலும் ஊடகங்கள் சமூக வலைதளங்கள் பொதுக்கூட்டங்கள் என எங்கு சென்றாலும் எடப்பாடி பழனிச்சாமி மிகக் கடுமையாக விமர்சித்து வந்தார். இது ஒரு வகையில் இபிஎஸ்க்கு இடைஞ்சலாகவே கருதப்பட்டது.

மது ஆறு
இந்நிலையில் தான் இபிஎஸ் அணியை சேர்ந்த செல்லூர் ராஜு படி தாண்டிய பத்தினியாக கோவை செல்வராஜ் உள்ளார். அவர் எத்தனையோ கட்சிகளுக்கு தாவி விட்டார் என திடீரென விமர்சனம் செய்திருக்கிறார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓடவில்லை, எங்கு பார்த்தாலும் போதை ஆறு தான் ஓடுகிறது. ஒரு காலத்தில் பெரியவர்கள் மட்டுமே மது குடித்த நிலையில் தற்போது பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என அனைவரும் மது குடிக்கின்றனர்.

முதல்வர் ஸ்டாலின்
பள்ளிகளுக்கு முன்பாக போதைப் பொருட்கள் தாராளமாக விற்கப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் ஊர் ஊராகச் சென்று போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார். ஒரு பக்கம் துர்கா ஸ்டாலின், ஒரு பக்கம் உதயநிதி ஸ்டாலின், இன்னொரு பக்கம் மருமகன் சபரீசன் இவர்களுக்காகத்தான் இந்த ஆட்சி நடைபெற்று கொண்டுள்ளது. அதிமுக நிச்சயமாக இரட்டை இலை சின்னத்தை பெற்று தேர்தலில் வெற்றி பெறும். வழக்குகளைப் பற்றி எனக்குத் தெரியாது. அது குறித்து நான் பேசவும் முடியாது.

கோவை செல்வராஜ்
பிரதமர் மோடியின் நடவடிக்கைகளை பாராட்டியும், நம்முடைய தமிழ் கலாச்சாரத்தை உலகெங்கும் பிரதமர் கொண்டு செல்கிறார் என்பதை குஜராத்தில் உள்ள தமிழர்கள் அறிந்து ஒட்டுமொத்தமாக குஜராத்தில் உள்ள தமிழர்கள் மோடிக்கு வாக்கு செலுத்தியுள்ளனர். அந்த பிரதிபலிப்பு எல்லா இடங்களில் இருக்குமா என தெரியவில்லை. கூட்டணி அமைவதை வைத்து தான் சொல்ல முடியும். இன்று வளர்ந்து வருகிற பாஜக அதிமுகவுடன் இணைந்தால் நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும். அது அவர்களின் கையில் தான் உள்ளது. ஒபிஎஸ் அணியினர் திமுக செல்கிறார்கள். படி தாண்டிய பத்தினியாக கோவை செல்வராஜ் உள்ளார். அவர் எத்தனையோ கட்சிகளுக்கு தாவி விட்டார்." என்றார்.