உயிரை பறித்த சிக்கன் கிரேவி.. பட்டதாரி இளைஞர் பலியானது எப்படி? மதுரையில் என்ன நடந்தது?
மதுரை: மதுரையில் சுடவைத்து சிக்கன் கிரேவியை சாப்பிட்ட பட்டதாரி இளைஞர் வாந்தி, வயிற்றுபோக்கால் பாதிக்கப்பட்டு பலியாகி உள்ளார்.
மதுரை கோசாகுளம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தரராஜ். இளைஞரான இவர் வீட்டில் இருந்தே டிரேடிங் மார்க்கெட்டிங் பணியை மேற்கொண்டு வந்தார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில் தான் கடந்த 26ம் தேதி ஆனந்தராஜின் தந்தை மேலபனங்காடியில் உள்ள ஹோட்டலில் இருந்து செட்டிநாடு சிக்கன் கிரேவி வாங்கி வந்துள்ளார். இதனை அன்று இரவு ஆனந்தராஜ் தனது குழந்தையுடன் சாப்பிட்டுள்ளார். அப்போது சிக்கன் கிரேவி மீதம் இருந்துள்ளது.
இதையடுத்து மறுநாள் காலையில் எழுந்த ஆனந்தராஜ், மீதமிருந்த சிக்கன் கிரேவியை சுடவைத்து மீண்டும் சாப்பிட்டுள்ளார். இதனை சாப்பிட்ட பிறகு அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து குடும்பத்தினர் ஆனந்தராஜை மீட்டு பிபி குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சிகிச்சையை தொடர்ந்து ஆனந்தராஜ் நலமானார். வீடு திரும்பினார். ஆனாலும் அவருக்கு வயிற்றுப்போக்கு பிரச்சனை தீரவில்லை. இதையடுத்து கடந்த 28 ம் தேதி அவருக்கு மீண்டும் ஊசி செலுத்தப்பட்டது. ஆனாலும் உடல்நலம் சரியாகவில்லை. இதற்கிடையே தான் அவர் திடீரென்று அன்று மாலையில் மயங்கி உள்ளார்.
இதையடுத்து அவர் மீண்டும் அவர் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஆனந்தராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதாவது மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் இறந்துள்ளார்.
இந்நிலையில் தான் ஆனந்தராஜின் உடல்நலக்குறைவுக்கு சுடவைத்து சாப்பிட்ட சிக்கன் கிரேவி தான் காரணம் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதுபற்றி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications