அஞ்சலி செலுத்திய இடத்தில் மோதல்..அமைச்சர் பிடிஆர் கார் மீது செருப்பு வீசிய பாஜக..மதுரையில் பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    PTR | மதுரை விமானநிலையத்தில் PTR கார் மீது BJP செருப்பு வீசி தாக்குதல்!

    ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்திலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்திருந்த ராணுவ முகாமில் கடந்த 11ம் தேதி அதிகாலையில் பயங்கரவாதிகளால் தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றது. இதில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 3 வீரர்கள் வீர மரணமடைந்தனர். இந்த தாக்குதலில் உயிரிழந்த 3 ராணுவ வீரர்களில் ஒருவர், மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியை சேர்ந்த லட்சுமணன்.

    தமிழக அரசு உதவி

    தமிழக அரசு உதவி

    நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும்பெரும் கவலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, உயிரிழந்த லட்சுமணின் குடும்பத்தாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் லட்சுமணின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

    மதுரை வந்த ராணுவ வீரரின் உடல்

    மதுரை வந்த ராணுவ வீரரின் உடல்

    இதனையடுத்து இன்று நண்பகல் அவரது உடல் மதுரைக்கு விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. விமான நிலைய இயக்குநர் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டுள்ள வீரரின் உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

     திமுக - பாஜக மோதல்

    திமுக - பாஜக மோதல்

    இதனிடையே அஞ்சலி செலுத்துவதில் திமுக - பாஜக இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து காரில் ஏறி புறப்பட்ட தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பிஜேபியை சேர்ந்த பெண் உறுப்பினர் ஒருவர் செருப்பை எரிந்துள்ளார்.

     பிடிஆர் மீது தாக்குதல்

    பிடிஆர் மீது தாக்குதல்

    இதனை தொடர்ந்து பாஜக தொண்டர்கள் பலரும், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காரை வழிமறித்து தாக்கினர். இதனால் அடுத்த சில நிமிடங்கள் மதுரை விமான நிலையத்தில் பதற்றம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் கலவரத்தில் ஈடுபட்ட நபர்களை அப்புறப்படுத்தினர். தமிழக அமைச்சர் மீது பாஜக தொண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+