பாஜக தொண்டர்கள் என்றாலே நல்லவர்கள், வல்லவர்கள்... சொல்கிறார் தமிழிசை சௌந்தரராஜன்

Subscribe to Oneindia Tamil

மதுரை: பாஜக தொண்டர்கள் என்றாலே நல்லவர்கள், வல்லவர்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரை ஒத்தக்கடையில் நடந்த அக்கட்சியின் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், வைகோ உள்ளிட்டோரின் கருப்புக்கொடி போராட்டம் வெற்றுப் போராட்டம் என்று விமர்ச்சித்தார்.

BJPs volunteers are good and powerful Says Tamilisai Soundararjan

ரஜினியின் அறிவிப்பு குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் கவலைப்படலாம், பாஜகவுக்கு எந்த கவலையும் இல்லை என்றும், தமிழகத்தில் பாஜக பலமான கூட்டணி அமைக்க உள்ளதாகவும் கூறினார்.

ரஜினி அறிக்கையின்படி தண்ணீர் பிரச்னையை பிரதமர் மோடி தான் தீர்த்து வருவதாகவும், காவி கொடி உயரே பறக்க, பறக்க கருப்புக்கொடி கீழே இறக்கப்படும் என்றும் பேசினார்.

முன்னதாக, தினகரன் பலமாக இருக்கிறார் என்றால் செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தது ஏன்? என்று கேள்வி எழுப்பிய அவர், தினகரன் பிரிக்கக்கூடிய வாக்குகள் எங்களை பலவீனப்படுத்தாது என்றார்.

மேலும், புல்வாமா தாக்குதலை அரசியலாக்க முடியாது என்றும் தீவிரவாதம் எல்லாவிதத்திலும் கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். ரஜினிகாந்த் மற்றும் அஜித்குமாரின் அறிக்கையால், பாஜகவுக்கு எந்த பாதகமும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+