"திமுகவில் உங்களை எதிர்பார்க்கலாமா?" வந்து விழுந்த கேள்வி.. மு.க அழகிரி அளித்த 'நச்' பதில்!
மதுரை: மதுரையில் நாளை நடைபெறும் அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்க அமைச்சர் உதய நிதிஸ்டாலின் இன்று மதுரை வருகை தந்தார். மதுரையில் தனது பெரியப்பாவும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க அழகிரியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு உதய நிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது உடன் இருந்த மு.க அழகிரியிடம் திமுகவில் உங்களை எதிர்பார்க்கலாமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகிறது.
இதில், மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடக்கிறது. இந்த போட்டியினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

பெரியப்பா வீட்டுக்கு சென்ற உதயநிதி
அலங்கா நல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைப்பதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று விமானம் மூலம் மதுரை வந்தார். பின்னர் அவர் அங்கிருந்து மதுரை டி.வி.எஸ்.நகரில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சரும், பெரியப்பாவுமான மு.க. அழகிரியின் வீட்டிற்கு வந்தார். அவரை மு.க.அழகரி மற்றும் காந்தி அழகிரி ஆகியோர் வாசலில் வந்து வரவேற்றனர்.

காலில் விழுந்து ஆசிர்வாதம்
அப்போது உதயநிதி ஸ்டாலின், மு.க.அழகிரியின் காலின் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். அதன்பின் சால்வை அளித்து உதயநிதி ஆசிபெற்றார். தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், மு.க.அழகிரி வீட்டிற்கு சென்றார். இருவரும் சுமார் 20 நிமிடங்களுக்கு பேசினர். அதன்பின் வீட்டில் இருந்து வெளியே வந்த உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காலில் விழுந்து ஆசிர்வாதம்
அப்போது உதயநிதி ஸ்டாலின், மு.க.அழகிரியின் காலின் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். அதன்பின் சால்வை அளித்து உதயநிதி ஆசிபெற்றார். தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், மு.க.அழகிரி வீட்டிற்கு சென்றார். இருவரும் சுமார் 20 நிமிடங்களுக்கு பேசினர். அதன்பின் வீட்டில் இருந்து வெளியே வந்த உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெரியப்பாவிடம் ஆசிபெற்றேன்
"அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நாளை ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்க இருக்கிறேன். பெரியப்பா அழகிரியை சந்தித்து ஆசிபெற்றேன். பெரியப்பாவும் என்னை வாழ்த்தினார்" என்றார். தொடர்ந்து மு.க அழகிரி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அழகிரி கூறியதாவது:- எனது தம்பி மகன் என்ற முறையில் அமைச்சரான பிறகு என்னை பார்க்க வந்தார். பெரியம்மாவிடமும் பெரியப்பாவான என்னிடமும் ஆசிர்வாதம் வாங்க வந்தார்.

(திமுகவில்) எதிர்பார்க்கலாமா?
உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானது எல்லையில்லாத மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் சிறுவனாக இருக்கும் போது நெல்லையில் உள்ள எங்களது வீட்டிற்கு அடிக்கடி வந்திருக்கிறார். எனது தம்பி மு.க.ஸ்டாலின், முதல்-அமைச்சர் ஆகி இருக்கிறார். மகன் உதயநிதி, அமைச்சர் ஆகி இருக்கிறார். அதனை விட பெரிய மகிழ்ச்சி இருக்கிறதா?." என்றார். அப்போது செய்தியாளர் ஒருவர் கூடிய விரைவில் உங்களை (திமுகவில்) எதிர்பார்க்கலாமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மு.க அழகிரி, "அது அவர்களைத்தான் கேட்க வேண்டும்" என்று பதிலளித்தார்.

வரவேற்ற நிதி அமைச்சர்
முன்னதாக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்க மதுரை வந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விமான நிலையத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து வரவேற்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications