மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பேய்குளம் மகேந்திரனை சாத்தான்குளம் போலீசார் அடித்து கொன்ற வழக்கு.. சிபிசிஐடி விசாரணை தீவிரம்

Google Oneindia Tamil News

மதுரை: சாத்தான்குளம் போலீசாரால் அடித்து கொலைசெய்யப்பட்ட மகேந்திரன் வழக்கு மதுரை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. காவல், துணை கண்காணிப்பாளர் முரளி விசாரணையை தொடங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் பேய்குளம் பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவர் கடந்த ஆண்டு கடந்த ஆண்டு சாத்தான்குளம் காவல் நிலைய போலீசாரால், கொலை வழக்கு ஒன்றில் சந்தேக நபராக கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை போலீசார் விசாரணை என்ற பெயரில் அடித்து துன்புறுத்தியதில் மகேந்திரன் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக, மகேந்திரன் தாயார் வடிவம்மாள் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தொடுத்த மனுவின் அடிப்படையில் முதலில் தூத்துக்குடி ,நெல்லை,சரக சிபிசிஐடி காவல் துணை கண்காணிப்பாளர் அணில்குமார் தலைமையில் வழக்கினை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடிகூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி

 நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்றம் உத்தரவு

இந்நிலையில் நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற குற்ற வழக்குகள் தொடர்பாகவும் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருவதால் சாத்தான்குளம் மகேந்திரன் வழக்கு விசாரணை தாமதமானதாக தெரிகிறது. எனவே வழக்கு விசாரணையை துரிதப்படுத்த மகேந்திரன் கொலை வழக்கை, மதுரை சிபிசிஐடி காவல் துணை கண்காணிப்பாளர் முரளி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முரளி விசாரணை ஆரம்பம்

முரளி விசாரணை ஆரம்பம்

இதைத்தொடர்ந்து, மகேந்திரன் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை காவல் துணை கண்காணிப்பாளர் முரளி, தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகம் பெற்றுக்கொண்டு விசாரணையை தொடங்கியுள்ளார். அதன்பேரில், விசாரணைக்காக மகேந்திரனின் சகோதரியான சந்தனமாரி, தாயார் வடிவம்மாள் மற்றும் பலருக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. அதன்பேரில் மகேந்திரனின் உறவினர்களிடம் தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து காவல் துணை கண்காணிப்பாளர் முரளி இன்று விசாரணை நடத்தினார்.

 சிபிசிஐடிக்கு உத்தரவு

சிபிசிஐடிக்கு உத்தரவு

இது குறித்து வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், மகேந்திரன் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை உயர்நீதிமன்ற கிளை சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டது. ஆனால் இந்த வழக்கில் இறுதி விசாரணை அறிக்கை இன்று வரை தாக்கல் செய்யப்படவில்லை எனவே விசாரணையை துரிதப்படுத்த மகேந்திரன் கொலை வழக்கை மதுரை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊர்க்காவல் படையினர்

ஊர்க்காவல் படையினர்

மதுரை சிபிசிஐடி போலீசார், சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட மகேந்திரன் வழக்கு தொடர்பாக விரைவாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனையை பெற்றுத் தர வேண்டும். விசாரணைக்காக மகேந்திரனை சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் அடித்து துன்புறுத்தியது மற்றும் அந்நேரத்தில் பணியில் இருந்த காவலர்கள், ஊர்காவல் படையினர் ஆகியோரிடமும் விசாரணை நடத்தி உரிய தண்டனை வாங்கி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

தந்தை மகன்

தந்தை மகன்

சாத்தான்குளத்தில் போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்த விவகாரம் இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதேபோல மகேந்திரன் மரணம் நடைபெற்றிருந்தபோதிலும், தற்போதுதான் வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது.

English summary
The case of Mahendran who was beaten to death by the Sathankulam police has been transferred to the Madurai CBCID. Deputy Superintendent of Police Murali launched the investigation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X