விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு.. அதிகாரிகளுக்கு சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
மதுரை: மதுரையில் மாநகராட்சி விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டு வரும் நிலையில், விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கில் அதிகாரிகள் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை பல ஆண்டுகளாகவே விதிமுறைகளை மீறி கட்டிடங்கள் கட்டப்படுவதும் பின்னர் நகர மேலாண்மை முகமைகள், ஏதோ அபராதம் வசூலித்துவிட்டு அங்கீகாரம் அளிப்பது தமிழகத்தில் தொடர்கதையாக இருக்கிறது. விதிமுறைகள் மீறப்படுவதால் மக்களின் வாழ்க்கைத் தரமும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுவது தொடர்கிறது.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கட்டிடங்கள் கட்டப்பட வேண்டுமானால் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் பிளான் அப்ரூவல் வாங்கிய பிறகுதான் கட்டிடங்கள் கட்டுவதற்கு கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல் மற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி என்றால், அதற்கு உரிய உள்ளாட்சி அமைப்பிடம் பிளான் அப்ரூவல் வாங்கிய பிறகுதான் கட்டிடங்கள் கட்ட வேண்டும்.. ஆனால் அரசின் விதிகளை மதிக்காமல் பணபலத்தாலும் அரசியல் செல்வாக்காலும் சிலர் விதிகளை மீறி கட்டிடங்களை கட்டிவிடுகிறார்கள்.. அப்படி கட்டப்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்களை முறையாக ஆய்வு செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அரசு இந்த விவகாரத்தில் இரும்பு கரம் கொண்டு செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.
இந்நிலையில் மதுரை அண்ணாநகரை சேர்ந்த வக்கீல் முத்துகுமார், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், மதுரை மாநகராட்சி 30-வது வார்டு பகுதியில் மாநகராட்சி விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த கட்டிடங்களுக்கு முறையான அனுமதி இதுவரை வாங்கப்படவில்லை..
தீயணைப்பு துறையினரிடமும் எந்தவித அனுமதியும் பெறவில்லை. இந்த கட்டிடங்களை மாநகராட்சி கட்டிட வரைபட அதிகாரிகளும், என்ஜினீயர்களும் முறையாக ஆய்வு செய்யவில்லை. இதுசம்பந்தமாக மதுரை மாவட்ட கலெக்டரிடம் குறைதீர்க்கும் நாளில் புகார் அளித்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே எனது புகாரின்பேரில் விதிகளை மீறி கட்டப்படும் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் நீலமேகம் ஆஜராகி, விதிமீறல் கட்டிடங்களால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாதிட்டார். விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications