Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தென்காசி கிருத்திகா பட்டேலை தாத்தாவுடன் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு.. என்ன காரணம்?

தென்காசி கிருத்திகா பட்டேலை அவரது தாத்தாவுடன் அனுப்ப சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு

Subscribe to Oneindia Tamil

மதுரை: தென்காசி அருகே கடத்தப்பட்டதாக கூறப்படும் கிருத்திகா பட்டேலை அவருடைய தாத்தாவிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.

தென்காசி மாவட்டம் இலஞ்சி அருகே உள்ள கொட்டாக்குளம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பனின் மகன் வினித்தும் கிருத்திகா பட்டேலும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனால் கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் தேதி இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி நாகர்கோவில் நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் பெண் வீட்டார், வினித்தை தாக்கிவிட்டு கிருத்திகாவை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றனர்.

கிருத்திகா வெளியிட்ட வீடியோ

கிருத்திகா வெளியிட்ட வீடியோ

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து குற்றாலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். அத்துடன் கிருத்திகாவை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிருத்திகா வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் தன்னை யாரும் கடத்தவில்லை.

உறவுக்கார நபர்

உறவுக்கார நபர்

தான் உறவுக்கார நபரை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியிருந்தார். இந்த வீடியோவும் பரபரப்பை கிளப்பியது. மனைவி கிருத்திகாவை அவரது பெற்றோர் பிணையாக பிடித்து வைத்துக் கொண்டு இது போல் அவரை வீடியோ வெளியிட வைக்கிறார்கள் என வினித் குற்றம்சாட்டினார். இந்த நிலையில் கிருத்திகாவை மீட்டுத் தர கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வினித் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது கிருத்திகாவை மீட்க தனிப்படை போலீஸார் குஜராத் சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

கிருத்திகாவும் வினித்தும்

கிருத்திகாவும் வினித்தும்

இந்த நிலையில் கிருத்திகாவும் வினித்தும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியது போன்ற ஒரு ஆடியோவை வினித்தின் வழக்கறிஞர் மூலம் வெளியிடப்பட்டது. அதில் கிருத்திகா கூறுகையில் நான் யாருடைய மிரட்டலுக்கும் ஆளாகவில்லை. எனது வாழ்க்கையையும் உனது வாழ்க்கையையும் கருத்தில் கொண்டு தான் இந்த முடிவை எடுத்துள்ளேன். எனவே நீ கொடுத்த கேஸை வாபஸ் பெற்றுக் கொள். தேவையில்லாமல் உன் குடும்பத்தினரும் என் குடும்பத்தினரும் பாதிக்கப்படுகிறார்கள். இந்த பிரச்சினை முடியும் என நினைத்தேன். ஆனால் தொடர்ந்து கொண்டே போகிறது என பேசியுள்ளார்.

கிருத்திகா கடத்தல் வழக்கு

கிருத்திகா கடத்தல் வழக்கு

இதற்கு வினித், நீ சொல்ல வேண்டிய விஷயத்தை நேரடியாக வந்து சொல், வழக்கை நான் வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் என பதில் அளிப்பது போல் இருந்தது. இந்த ஆடியோவும் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் கிருத்திகா கடத்தப்பட்டதாக கூறப்படும் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீது விசாரணை நடத்தப்பட்டது. இதில் கிருத்திகாவை செங்கோட்டை நீதிமன்றத்தில் போலீஸார் 2 தினங்களுக்கு முன்னர் ஆஜர்படுத்தினர்.

நீதிபதி விசாரணை

நீதிபதி விசாரணை

அப்போது தென்காசி அருகே நன்னாகரம் பகுதியில் உள்ள காப்பகத்தில் வைத்து மனநல ஆலோசனை வழங்கி 2 நாட்களுக்கு பிறகு ஒப்புதல் வாக்குமூலம் பெற உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் செங்கோட்டை நீதிமன்ற நீதித் துறை நடுவர் சுனில்ராஜ் முன்னிலையில் கிருத்திகாவை போலீஸார் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற அறையில் வைத்து கிருத்திகாவிடம் செங்கோட்டை நீதித் துறை நடுவர் சுனில்ராஜா ஒப்புதல் வாக்குமூலத்தை பெற்றார். அதற்கு முன்பாக நீதிமன்றத்தின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் அனைத்தும் பூட்டப்பட்டு பாதுகாப்புக்காக சென்ற போலீஸாரும் வெளியேற்றப்பட்டனர்.

வாக்குமூலத்தில் என்ன உள்ளது

வாக்குமூலத்தில் என்ன உள்ளது

இந்த நிலையில் கிருத்திகா நீதிபதியிடம் என்ன சொன்னார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு மணி நேரம் அவர் விளக்கம் அளித்த நிலையில் சீலிடப்பட்ட கவரில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது. அதில் கிருத்திகா பட்டேல் தனது பெற்றோருடன் செல்வதாக தெரிவித்துள்ளார். கிருத்திகாவின் பெற்றோர் தலைமறைவாக உள்ள நிலையில் கிருத்திகாவை யாருடனும் அனுப்ப முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். இதனால் அவர் காப்பகத்திற்கு மீண்டும் அழைத்து செல்லப்பட்டார். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+