Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உங்களால் பெயர் பெற்ற உதயசந்திரன் ஐஏஎஸ்.. பாப்பாபட்டி மக்களிடம் நெகிழ்ந்து சொன்ன முதல்வர் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

மதுரை: உங்கள் உள்ளங்களை கவர்ந்திருக்க கூடிய உதயச்சந்திரன் ஐஏஎஸ் இன்று எனது தனிச் செயலாளர் என்று மதுரை மாவட்டம் பாப்பாபட்டியில் நடைபெற்ற, கிராம சபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

பாப்பாபட்டியை முதல்வர் தேர்ந்தெடுத்த காரணம் மிகவும் சுவாரசியமானது மற்றும் தனித்துவமானதும் கூட.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள பாப்பாபட்டியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்த கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் அனீஷ் சேகர், ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

கிராம சபை கூட்டம்

கிராம சபை கூட்டம்

கொரோனா பரவல் காரணமாக, கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறாமல் இருந்து வந்தது. இதனால் ஸ்டாலினால் கிராம சபை கூட்டங்களில் பங்கேற்க முடியவில்லை. இந்த நிலையில், தமிழகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்த பிறகு இப்போது முதல் முறையாக, கிராம தன்னாட்சியை வலியுறுத்திய காந்தியடிகளின் பிறந்த நாளில், இன்று கிராம சபைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஏன் பாப்பாபட்டி தேர்வு

ஏன் பாப்பாபட்டி தேர்வு

அதெல்லாம் சரி.. மதுரை மாவட்டம் பாப்பாபட்டி ஊராட்சி ஏன் இதற்காக முதல்வரால் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது இதில் மற்றொரு சுவாரசிய அம்சமாகும். பாப்பாபட்டி, கீரிப்பட்டி மற்றும் நாட்டாமங்கலம் ஊராட்சிகளின் தலைவா் பதவிகள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்டதை இப்பகுதிகளைச் சோ்ந்த பிற சமூகத்தினா் ஏற்காததால் 1996 முதல் இந்த ஊராட்சிகளில் தோ்தல் நடத்த முடியவில்லை. தோ்தல் நடந்தாலும், தோ்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சித் தலைவா்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து வந்தனர்.

தேர்தல் நடந்தது

தேர்தல் நடந்தது

இதுபோன்ற ஜாதி ஏற்றத் தாழ்வு பிரச்சினையால், இந்த ஊராட்சிகள் தேசிய அளவில் கவனம் பெற்றன. அனைத்து அரசியல் கட்சிகளும் தோ்தலை நடத்த நெருக்கடி கொடுத்தன. இந்த நிலையில்தான், 2006ம் ஆண்டு கருணாநிதி தலைமையில் ஆட்சி நடைபெற்றபோது, உள்ளாட்சித் துறை அமைச்சராக ஸ்டாலின் பதவி வகித்தார். அப்போது மதுரை மாவட்ட ஆட்சியராக த.உதயசந்திரன் பதவி வகித்தார். இவர்கள் மூவரும் எடுத்த தீவிர நடவடிக்கையால், இந்த ஊராட்சிகளுக்குத் தோ்தல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. 10 ஆண்டுகளாக இருந்து வந்த பிரச்னை முடிவுக்கு வந்தது.

சமூக நீதி

சமூக நீதி

இதற்கு பிறகு தற்போது வரை இந்த ஊராட்சிகளில் சுமுகமாக தோ்தல் நடைபெற்று வருகிறது. இப்போது முதல்வரின் முதன்மைச் செயலாளர் பதவியில் உள்ளார் உதயசந்திரன். எனவே, பாப்பாபட்டி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமூக நீதியை நிலைநாட்டியதை நினைவுகூறும் வகையில், அந்த ஊரில் நடந்த கூட்டத்தில், பங்கேற்க முதல்வா் ஸ்டாலின் முடிவு செய்தார்.

Recommended Video

    Boys Hostel-க்கு திடீர் விசிட் அடித்த முதல்வர் MK Stalin | Oneindia Tamil
    உதயசந்திரன்

    உதயசந்திரன்

    கிராம சபை கூட்டத்தில் பேசிய, முதல்வர் ஸ்டாலின், பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் பங்கேற்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஏற்கனவே இந்த மாவட்டத்தில் கலெக்டராக இருந்து, உங்களால் கவரப்பட்ட, உங்களால் பெயர் பெற்ற, போற்றப்படும், உங்களால் சிறப்புக்குரியவராக விளங்கும் உதயசந்திரன் ஐஏஎஸ், இப்போது, எனக்கு தனிச் செயலாளராக உள்ளார். திமுக அளித்த 505 தேர்தல் வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். அனைத்து, தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றியே தீருவோம். இவ்வாறு ஸ்டாலின் பேசினார். கிராம சபை கூட்டத்தில் வைத்து, ஐஏஎஸ் அதிகாரியை கவுரவப்படுத்தியுள்ளார் ஸ்டாலின்.

    யார் இந்த உதயசந்திரன்

    யார் இந்த உதயசந்திரன்

    அதிமுக ஆட்சியில், தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலாளராக பணியாற்றியவர் உதயச்சந்திரன். ஒரு கட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை விடவும் அதிகமாக பாராட்டுகளை பெறத் தொடங்கியிருந்தார். டிஎன்பிஎஸ்சி செயலாளராக நியமிக்கப்பட்ட உதயச்சந்திரன் சிறப்பாக பணியாற்றி வந்தார். இந்த காலகட்டத்தில் பல புதுமைகளை தேர்வாணையத்தில் புதுப்பித்தவர். அரசு தேர்வுகளுக்கு இணையதளத்திலேயே விண்ணப்பிப்பது, ஹால் டிக்கெட்களை நாமாகவே பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொள்வது என பல உத்திகளை கையாண்டார். இந்த நிலையில் தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு மாற்றப்பட்டார். அங்கும் கீழடி அகழாய்வு விஷயத்தில் மிகுந்த பங்களிப்பு வழங்கி அகழாய்வை விரிவுபடுத்தினார். சமச்சீர் கல்வி வடிவமைப்பில் உதயச்சந்திரன் பங்களிப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+