காலை சிற்றுண்டி திட்டம்.. மாணவர்களோடு மாணவராக.. ஊட்டிவிட்டு அன்பை பரிமாறிய முதல்வர்!
மதுரை: தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தின் போது, மாணவர்களோடு மாணவராக அமர்ந்து சாப்பிட்ட முதல்வர் ஸ்டாலின், அவர்களுக்கு ஊட்டிவிட்டு அன்பை பரிமாறினார்.
முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாளையொட்டி, மதுரையில் நெல்பேட்டை பகுதியில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள், எம்பி-க்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

சமையல் கூடத்தில் ஆய்வு
இதனைத்தொடர்ந்து நெல்பேட்டை பகுதியில் உள்ள காலைச் சிற்றுண்டித் திட்டத்திற்கான நவீன சமையல் கூடத்தைப் பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவர்களுக்கான காலை உணவை சுவைத்து ஆய்வு செய்தார். அப்போது சமையல் கூடம் சுகாதாரமாக இருக்கிறதா, சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய்கறிகளின் தரம் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

உணவை ருசி பார்த்த ஸ்டாலின்
இதனைத்தொடர்ந்து மாணவர்களுக்கான சிற்றுண்டியை சமையல் கலைஞர் வழங்க, அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுவைத்து பார்த்து பாராட்டினார். இதனைத்தொடர்ந்து சமையல் கூடத்தில் இருந்து மாணவர்களுக்கு சிற்றுண்டி கொண்டு செல்லும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் சிற்றுண்டிகள் கொண்டு சென்ற வாகனங்களை திறந்து பார்வையிட்டார்.

அன்பை பரிமாறிய முதல்வர்
இதன் பின்னர் நெல்பேட்டை பகுதியில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சி பள்ளிக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து மாணவர்களுக்கு உணவை பரிமாறிய முதல்வர் ஸ்டாலின், பின்னர் அவர்களோடு ஒன்றாக அமர்ந்து காலை சிற்றுண்டியை சாப்பிட்டார். அப்போது அருகில் இருந்த மாணவ, மாணவியருக்கு சிற்றுண்டியை ஊட்டிவிட்டு, அன்பை பரிமாறிக் கொண்டார்.

மாணவர்களுடன் முதல்வர் பேச்சு
தொடர்ந்து மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டே, அவர்களுடன் சில வார்த்தைகள் பேசியது காண்போர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மாணவர்களும் எவ்வித தயக்கமுமின்றி முதலமைச்சருடன் பேசிக் கொண்டே உணவை சாப்பிட்டனர். முதலமைச்சர் ஸ்டாலின் மாணவர்களோடு அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டது மாணவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications