மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செருப்பை கழற்றி அடிக்க பாய்ந்த எம்எல்ஏ மூர்த்தி.. கொந்தளித்த பாஜக.. ஆக்ஷன் வருமா? தலைவலியில் திமுக!

பாஜக பிரமுகரை செருப்பால் அடிக்க பாய்ந்துள்ளார் மதுரை திமுக எம்எல்ஏ

Google Oneindia Tamil News

மதுரை: செருப்பை கழட்டி பாஜக பிரமுகர் மனைவியை அடிக்க பாய்ந்ததாக திமுக எம்எல்ஏ மீது பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.. இந்த விவகாரம் வெடித்து கிளம்பவும் ஆரம்பித்துவிட்டது.. திமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளது பாஜக.. அதேபோல, சங்கரபாண்டியன் அளித்த புகாரை அடுத்து எம்எல்ஏ மூர்த்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

    பரபரப்பு.. ஊழலை சுட்டி காட்டியவரை.. வீடு புகுந்து.. அடிக்க பாய்ந்தாரா திமுக எம்எல்ஏ?

    மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் சங்கரபாண்டியன்.. மதுரை பாஜக நிர்வாகியான இவர் ஒரு டாக்டர்.. சமூக விவகாரங்களில் அளவுக்கு அதிகமாக அக்கறை காட்டி வருபவர்.. தவறு எங்கே நடந்தாலும் துணிச்சலாக சுட்டிக் காட்டுபவர்.

    சில காலமாகவே மதுரை கிழக்கு தொகுதி திமுக எம்எல்ஏ மூர்த்தி ஊழலில் ஈடுபட்டதாக சில புகார்களை கூறி வந்துள்ளார்.. தன்னுடைய வீட்டு பக்கம் கண்மாய் ஒன்று காணாமல் போய்விட்டதாக மதுரை நகர் முழுவதும் சுவரொட்டி அடித்து ஒட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர்தான் சங்கர பாண்டியன்.

    மதுரை லாக்டவுன்: அத்துமீறி வாகனங்களில் வலம் வந்தால் பறிமுதல்- 10 சிறப்பு பறக்கும் படை தீவிரம் மதுரை லாக்டவுன்: அத்துமீறி வாகனங்களில் வலம் வந்தால் பறிமுதல்- 10 சிறப்பு பறக்கும் படை தீவிரம்

    ஊரக வேலை உறுதி திட்டம்

    ஊரக வேலை உறுதி திட்டம்

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பல முறைகேடுகளை மூர்த்தி செய்துள்ளதாகவும் சங்கரபாண்டியன் பல ஆதாரங்களை வெளியிட்டார்.. அதுமட்டுமில்லை, ஊழல் பணத்தில் மூர்த்தி எங்கெங்கே சொத்துக்களை வாங்க போட்டுள்ளார் என்று நேற்று சில ஆதாரத்தையும் வெளியிட்டதாக தெரிகிறது. இந்த சம்பவம்தான் மூர்த்திக்கு மேலும் ஆத்திரத்தை கிளப்பி உள்ளது.. அதனால் சங்கரபாண்டியன் விட்டிற்கு சென்று தகராறு செய்திருக்கிறார்.

    கொலை மிரட்டல்

    கொலை மிரட்டல்

    இரு தரப்பிலுமே வாக்குவாதம் முற்றியுள்ளது.. ஒரு கட்டத்தில் மூர்த்தி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.. கணவனை மூர்த்தி தாக்கிவிடுவாரோ என்று பயந்துபோன சங்கரபாண்டியன் மனைவி குறுக்கே வந்துள்ளார். "எதுவா இருந்தாலும் போலீஸ்ல போய் புகார் கொடுங்க... அதுக்குன்னு இப்படி வீட்டுக்கு வந்து மிரட்டுவீங்களா?" என்று கேட்டுள்ளார்.. உடனே மூர்த்தியோ, ஆத்திரத்தில் செருப்பை கழட்டி ஓங்கிவிட்டு, பிறகு செருப்பை கீழே போட்டார்.. வீட்டு வாசலில் நின்று கொண்டு கோபமாக திட்டி கொண்டே இருந்தார்.

    3 மணி நேரம் சண்டை

    3 மணி நேரம் சண்டை

    இதெல்லாமே அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ளது.. இவர்களுக்குள் 3 மணி நேரம் இந்த சண்டை நடந்துள்ளது.. இந்த காட்சிகள் பார்ப்பதற்கே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. வீடியோவில் மூர்த்தியுடன் 3 பேர் வந்துள்ளனர்.. அவர்கள் இந்த தகராறை வேடிக்கை பார்த்து நின்றிருக்கிறார்களே தவிர, பிரச்சனையை தடுக்கவில்லை.. மேலும் இந்த வீடியோ ஆதாரம் வலுவாக உள்ளதால், எப்படியும் மூர்த்தியை கைது செய்ய வேண்டும் என்று மதுரை பாஜக வலியுறுத்தி வருகிறது.

    ஸ்டாலின்

    ஸ்டாலின்

    இது குறித்து பாஜக இளைஞரணியினரும், வழக்கறிஞர்களும் மதுரை எஸ்பியிடம் புகார் தந்துள்ளனர்.. மேலும் முதல்வரிடமும் புகார் அளித்துள்ளதாக தெரிகிறது.. மேலும் சங்கரபாண்டி அளித்த புகாரை அடுத்து எம்எல்ஏ மூர்த்தி மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஊமச்சிகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.அதனால் இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிடுவாரா? கூட்டணியில் உள்ள பாஜகவின் கோரிக்கைக்கு செவிசாய்ப்பாரா? என்பது இனிமேல்தான் தெரியும்.

    புகார்

    புகார்

    இது குறித்து பாஜக இளைஞரணியினரும், வழக்கறிஞர்களும் மதுரை எஸ்பியிடம் புகார் தந்துள்ளனர்.. மேலும் முதல்வரிடமும் புகார் அளித்துள்ளதாக தெரிகிறது.. அதனால் இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிடுவாரா? கூட்டணியில் உள்ள பாஜகவின் கோரிக்கைக்கு செவிசாய்ப்பாரா? என்பது இனிமேல்தான் தெரியும்.

    கெட்ட பெயர்

    கெட்ட பெயர்

    இது எல்லாவற்றிற்கும் மேலாக, திமுகவுக்கு இப்படி சிலர் கெட்ட பெயர்களை ஏற்படுத்தி வருவது அக்கட்சி தலைமைக்கு தர்மசங்கடமான நிலைமையை தந்து வருகிறது.. திருவள்ளூர் மாவட்டத்தில் பர்த்டே பாரட்டி வைத்து 50 பேருக்கு தொற்றை பரவவிட்டார் அங்குள்ள திமுக பிரமுகர்.. இப்போது மதுரையில் அடுத்த பஞ்சாயத்து ஆரம்பமாகி உள்ளது.. தொற்றை ஒழிக்க ஒவ்வொரு நாளும் திமுக தலைவர் கடுமையாக போராடி வரும்போது, கட்சிக்குள்ளேயே ஒருசிலரின் இதுபோன்ற அராஜக செயல்களால், கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படும் நிலை வந்துள்ளது.. தலைமைதான் இதை கண்டித்து, அறிவுறுத்த வேண்டும்.

    English summary
    complaint against madurai dmk mla moorthy beat the woman with sandals
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X