சிபிஎம் மாநாட்டில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தீர்மானம்! மத்திய அரசின் இஸ்ரேல் ஆதரவுக்கு எதிர்ப்பு
மதுரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) 24வது அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெற்று வருகிறது. இதில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
தீர்மானத்தில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை கைவிட்டு, பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறத்தப்பட்டிருக்கிறது.

பாலஸ்தீன மக்களின் பாரம்பரிய உடையான 'கஃபியாவை' (Kafiya) அணிந்துக்கொண்டு, அந்நாட்டுக்கு ஆதரவான முழக்கங்களை சிபிஎம் தலைவர்கள் மாநாட்டில் எழுப்பியிருந்தனர். இஸ்ரேலின் போரை கண்டித்த அவர்கள், அந்நாட்டை நிறவெறி நாடாக அறிவிக்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், "பாஜக தலைமையிலான மத்திய அரசு இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதை நிறுத்தி, பாலஸ்தீனை ஆதரிக்கும் இந்தியாவின் பாரம்பரிய நிலைப்பாட்டை மீண்டும் பின்பற்ற வேண்டும். மத்திய கிழக்கில் நிரந்தர அமைதியை கொண்டுவர ஒரே வழிதான் இருக்கிறது. 1967ம் ஆண்டுக்கு முந்தைய எல்லைகளை அடிப்படையாக கொண்டு, கிழக்கு ஜெருசலேமை தலைநகராகக் கொண்டு சுதந்திர பாலஸ்தீனம் உருவாக்கப்பட வேண்டும். அதுதான் பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும்.

இதற்கான போராட்டத்தில் இந்திய மக்கள் பாலஸ்தீனத்துடன் நிற்பார்கள். காசாவின் மேற்கு கரை உள்ளிட்ட பகுதிகளை கைப்பற்றியுள்ள இஸ்ரேல், அங்கு தங்கள் நாட்டு மக்களை வேண்டும் என்றே குடியமர்த்தி, பாலஸ்தீனத்தை இஸ்ரேலாக அபகரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதன் நோக்கம் ஒன்றுதான் பாலஸ்தீன மக்களை அவர்கள் நாட்டிலிருந்து விரட்டியடிப்பதுதான். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலுக்கு வழங்கும் ஆயுத உதவியை இந்த தீர்மானம் மூலம் சிபிஎம் கடுமையாக கண்டிக்கிறது.

டொனால்ட் டிரம்ப் காசாவை சுற்றுலா களமாக மாற்றுவோம் என்று கூறியிருப்பது முழுக்க முழுக்க இஸ்ரேலின் நலனுக்காகத்தானே தவிர, பாலஸ்தீனத்தின் நலனுக்காக அல்ல. இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் அணுகுமுறை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இந்தியா தனது பாரம்பரிய பாலஸ்தீன நிலைப்பாட்டுக்கு எதிராக இஸ்ரேல் நிலைப்பாட்டை தற்போது கையில் எடுத்திருக்கிறது. பாலஸ்தீன பிரச்சனையை வெறும் யுத்தம் சார்ந்த விஷயமாக மட்டுமே பாஜகவும், சங் பரிவார் கும்பலும் சித்தரிக்கிறது.

ஆர்எஸ்எஸ் மற்றும் சியோனிஸ்டுகளுக்கு (zionists) இடையே மத அடிப்படையிலான தேசியத்தை அடையாளம் காணும் பார்வை மற்றும் முஸ்லிம்களை வெறுக்கும் மனப்பான்மையில் ஒரே மாதிரியான தீவிரவாதப்போக்கு இருக்கிறது" என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications