"முதல் நாளே".. கணவரின் அண்ணனா?.. குறுக்கே மாமியார் வேற.. "அட்ஜஸ்ட் பண்ணிக்கோ".. போலீசுக்கு ஓடிய பெண்
மதுரையில் இளம்பெண் ஒருவர், மாமியார், மைத்துனர் மீது போலீசில் புகார் தந்துள்ளார்
மதுரை: மதுரை மகளிர் ஸ்டேஷனில், இளம்பெண் ஒருவர் அளித்துள்ள புகார் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்து வருகிறார்கள்.
பெரும்பாலான வட மாநிலங்களின் கிராமங்களில் கல்வி மறுக்கப்படுவதால், நாளுக்கு நாள் குற்றங்கள் பெருகி கொண்டிருக்கின்றன.. மூடநம்பிக்கைகளை மறைமுகமாக மற்றும் நேரடியாக திணிக்கும் போக்கும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன..
இவை எல்லாம் சேர்ந்துதான், மனிதனை சில சமயங்களில் மிருகமாக்கிவிடுகிறது.. பாட்டி, மகள், தங்கை, சிறுமி என பாகுபாடு இல்லாமல் சீரழிக்கப்படுகிறார்கள் சில கயவர்களால்.. பெண்கள் மீதான வன்முறை தாக்குதலும் இதுவரை குறைந்தபாடில்லை.

ஆண்வாரிசு
இந்த விஷயத்தில், உத்தரபிரதேச மாநிலம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி கொண்டேயிருக்கிறது.. சில மாதங்களுக்கு முன்பு, ஹமிர்புர் மாவட்டத்தில், குஸ்மா என்ற பெண்ணுக்கு நடந்த கொடுமையை கேட்டு பொதுமக்கள் பதறிப்போய்விட்டனர்.. இவரது கணவர் பெயர் நீரஜ் ப்ரஜாப்தி.. கல்யாணம் ஆகி 10 வருடமாகிறது.. இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால், ஆண் வாரிசு இல்லை என்ற காரணத்திற்காக, நடுரோட்டில் கட்டி வைத்து குஸ்மாவை அடித்து தாக்கி உள்ளனர்.. அந்தரங்க உறுப்பிலும் கொடுமையாக அடித்து கட்டையால் தாக்கினர்..

மாமியார் ப்ளான்
இந்த சம்பவம் நடந்து அடுத்த சில நாட்களிலேயே இன்னொரு சம்பவமும் அம்மாநிலத்தில் நடந்தது. பண்டா மாவட்டத்தை சேர்ந்தவர் அந்த பெண்.. திருமணமாகி பல வருடமாகிவிட்டது.. ஆனால் குழந்தை இல்லை.. அந்த குடும்பத்தின் மூத்த மகனை, அந்த பெண் திருமணம் செய்திருந்தார்... மருமகள் குழந்தை பெற்றுத்தராத கோபம் மாமியாருக்கு நாளுக்கு நாள் அதிகமானது.. மருமகள் கர்ப்பம் தரிக்காத காரணத்தால், எப்படியாவது அவரை கர்ப்பம் தரிக்க வேண்டும் என்று பிளான் போட்டார்.. அதன்படி, தன்னுடைய 2 இளைய மகன்களையும், மருமகளின் அறைக்கு அனுப்பி, அந்த பெண்ணை பலாத்காரம் செய்யுமாறு சொன்னாராம்..

மச்சினன்கள்
அதேபோல, மைத்துனர்கள் 2 பேரும், அண்ணி என்றும் பாராமல், ரூமுக்குள் நுழைந்து பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இருவரும் வேறு வேறு நாளில் அண்ணியை பலாத்காரம் செய்தார்களாம்.. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மருமகள், அங்கிருந்து தப்பி வந்து போலீசில் புகார் தந்தபோதுதான், இப்படி ஒரு விஷயமே வெளிச்சத்துக்கு வந்தது. எங்கோ வடமாநிலத்தில் நடந்த இந்த சம்பவங்கள் நமக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்திவந்த நிலையில், இதோ, இப்போது நம்ம ஊரிலேயே இப்படி ஒரு கொடுமை நடந்துவிட்டது..

இன்ஸ்பெக்ஷன்
மதுரை திருப்பாலை அய்யப்பன் நகர் தாமரை வீதியைச் சேர்ந்தவர் பவித்ரா.. 25 வயதாகிறது.. இவர் தல்லாகுளம் மகளிர் போலீசில் ஒரு புகார் தந்துள்ளார்.. அந்த புகாரில் சொல்லி உள்ளதாவது: "எனக்கும் துருண்குமாருக்கும் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. அப்போது எனக்கு பெற்றோர் 50 பவுன் நகை, ரூ.5 லட்சம் மதிப்பில் சீர்வரிசை பொருட்கள் கொடுத்தனர். மேலும் ரூ. 10 லட்சம் செலவில் திருமணம் செய்து வைத்தனர். மதுரை பாலமேடு அரசு கால்நடை ஆஸ்பத்திரியில் துருண்குமார் ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார்.

மாமியாரும்
இந்த நிலையில், திருமண நாள் அன்று அவருக்கு ஆண்மை குறைபாடு உள்ளது என்பது தெரியவந்தது. நான் அதிர்ச்சியடைந்தாலும், வேறு வழியின்றி அவருடன் குடித்தனம் நடத்தி வந்தேன். இந்த நிலையில் துருண் குமாரின், அண்ணன் அருண்குமார் இதை சாதகமாக பயன்படுத்தி கொண்டு, எனக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். இதற்கு அவரது மனைவி திவ்யா, அவரது அம்மா தனலட்சுமி மற்றும் உறவினர் சரவணன் ஆகியோர் உடந்தையாக உள்ளனர். எனவே, நான் இது தொடர்பாக என் கணவரிடம் புகார் செய்தேன்.

அட்ஜஸ்ட்
அப்போது அவர், "என் சகோதரரை கொஞ்சம் அனுசரித்து நடந்து கொள்" என்று சொன்னார்.. இதனிடையே, என் மாமியார் குடும்பத்தினர் வரதட்சணையாக மேலும் ரூ.10 லட்சம் வாங்கி வரும்படி என்னை மிரட்டினார்கள். இதற்கு நான் மறுத்தேன். எனவே அவர்கள் என்னை பட்டினி போட்டு கொல்ல பார்க்கிறார்கள். எனவே போலீசார் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த புகாரின்பேரில் மதுரை தல்லாகுளம் மகளிர் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்... கொலை முயற்சி என்று பெண் குற்றஞ்சாட்டி உள்ளதால், மிகுந்த பரபரப்பை இந்த புகார் ஏற்படுத்தி வருகிறது.. என்னத்த சொல்றது?!!
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications