Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய் கட்சி மாநாடு.. சீனுக்குள் வந்த பிரேமலதா.. கூட்டணி குறித்தும் பரபர பதில்! ஆஹா இதை பாருங்க

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திமுக அரசு வேண்டுமென்றே விஜய் மாநாட்டிற்கு அனுமதி தராமல் காலம் தாழ்த்துவதாக விமர்சித்துள்ளார். மேலும், கார் ரேஸுக்கான அனுமதியை ஒரே இரவில் பெற்ற தமிழக அரசால் மாநாட்டிற்கான அனுமதியைத் தர மட்டும் முடியாதது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேமுதிக மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றிய செயலாளர் தவமணி இல்ல திருமண விழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார்.

tvk manadu actor vijay premalatha

பிரேமலதா விஜயகாந்த்: அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேசினார். சட்டங்களைக் கடுமையாக்கினால் மட்டுமே பெண்களுக்கு எதிரான குற்றம் குறையும் என்ற அவர், பசுத்தோல் போர்த்திய புலிகள் போலப் பெரிய மனிதர்கள் பலரும் பெண்களிடம் அத்துமீறுவதாகச் சாடியுள்ளார்.. மேலும், விஜய் நாட்டிற்கு அனுமதி தர திமுக அஞ்சுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்காவில் சைக்கிள் ஓட்டுகிறார், பாடுகிறார், சிலைகளின் முன்பு போட்டோ எடுத்துக் கொள்கிறார்.. எல்லாம் ஓகே... ஆனால், எவ்வளவு முதலீடுகளை ஈர்க்கிறார் என்பதை நாம் பொறுத்து இருந்து பார்ப்போம். அவர் ஏற்கனவே பல நாடுகளுக்குச் சென்றார். இதில் அவர் எத்தனை முதலீடுகளை ஈர்த்தார் என்பது தெரியவில்லை.. எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன என்பதும் தெரியவில்லை.

மேகதாது அணை: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் நேற்று உதயநிதியைச் சென்னையில் சந்தித்துள்ளார். அதன் பிறகு மேகதாதுவில் அணைக் கட்டினால் தமிழ்நாட்டிற்கு நல்லது என்று வேறு சொல்லி இருக்கிறார். ஆனால், நமது விவசாயிகள் நேற்று முன்தினம் என்னை நேரில் சந்தித்தனர். மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு பாலைவனமாக மாறும் என்பதே அவர்கள் கருத்தாக உள்ளது.

தமிழ்நாட்டில் அணைகளை அமைத்து, தண்ணீரைச் சேமிக்கப் பல திட்டங்களைக் கொண்டு வந்தால் தான் தமிழக விவசாயிகள் காக்கப்படும். மேகதாது அணையால் தமிழகத்திற்குப் பலன் இல்லை. எனவே, விவசாயிகளைக் காக்க வேண்டியது இங்குள்ள அனைத்து கட்சிகளின் கடமையாகும்" என்றார்.

ஹேமா கமிட்டி: தொடர்ந்து ஹேமா கமிட்டி ரிப்போர்ட் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் வன்மையாகக் கண்டிக்கக் கூடியது. இதுபோல பெண்களைத் தவறாகப் பயன்படுத்து மனப்பான்மை சினிமா துறையில் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் நடக்கிறது. பெண்களைத் தவறாகப் பயன்படுத்தும் மனப்பான்மை மாற வேண்டும். இங்கே பசுத்தோல் போர்த்திய புலிகள் போலப் பெரிய மனிதர் போர்வையில் பலரும் மோசமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். பெண்கள் துணிச்சலாக இருக்க வேண்டும்.

பெண்களுக்கு நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன். தவறுகள் எங்கு நடந்தாலும் கண்டிக்க வேண்டும். பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபடும் நபர்களுக்குத் தூக்குத் தண்டனை போன்ற கடுமையான தண்டனைகளை அளிக்க வேண்டும். சட்டங்கள் கடுமையானால் மட்டும் குற்றங்கள் குறையும். பாதிக்கப்பட்ட பெண்கள் எதற்கும் பயப்படத் தேவையில்லை.. தைரியமாகச் சொல்ல வேண்டும்.. சில ஆண்களின் தவறான செயல்களால் மொத்த ஆண்களுக்கும் தலைகுனிவாக உள்ளது" என்றார்.

விஜய் கட்சி மாநாடு: மேலும் விஜய் மாநாடு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு அனுமதி தருவதில் இந்த அரசுக்கு என்ன பிரச்சனை? கார் ரேஸ் நடத்த ஒரே இரவில் நீதிமன்ற அனுமதி பெற அரசால் முடிகிறது. ஆனால், மாநாட்டுக்கு அனுமதி தராமல் காலம் தாழ்த்துகிறார்கள். ஜனநாயக நாட்டில் கட்சி நடத்த அனைவருக்கும் உரிமை இருக்கிறது.

அப்படியிருக்கும் போது மாநாட்டிற்கு அனுமதி மறுப்பது ஏன்? இங்கே யார் வளர்ச்சியையும் யாரும் தடுக்க முடியாது. விஜய் இப்போது தான் கட்சி தொடங்கி இருக்கிறார். கொள்கைகளை அறிவிக்கப்படும். கட்சியை சில காலம் நடத்தட்டும், அதன் பின்னரே அவருடனான கூட்டணி பற்றி முடிவெடுக்க முடியும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+