திமுக ஆட்சி.. 23 ஆம் புலிகேசி ஆட்சி.. மதுரையில் செல்லூர் ராஜூ கடும் விமர்சனம்
மதுரை: மதுரையில் திமுக மாமன்ற உறுப்பினர்களையும் ராஜினாமா செய்ய சொல்லி இருக்கலாம், இந்த ஆட்சி 23 ஆம் புலிகேசி ஆட்சி போல தான் இருக்கிறது, கஞ்சா போதை பொருள் விற்பவர்கள் டோர் டெலிவரி செய்கிறார்கள் Amazon, zomato, SUKHI, போல் ஆகிவிட்டதுத என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அளித்த பேட்டியில் "எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக மீண்டும் வரவேண்டும்,தமிழ்நாடு அமைதியாக இருக்க வேண்டும் போதை கலாச்சாரம் இருக்கக்கூடாது, குழந்தைகள் முதல் பாட்டிகள் வரை பாதுகாப்பு இருக்க வேண்டும், ஊழல் இல்லாத ஆட்சி, சமமான ஆட்சி, உண்மையான ஆட்சி, 2026 ல் உண்மையான விடியலை எடப்பாடி பழனிச்சாமி கொடுப்பார்,.

எந்த முதலமைச்சரும் சாதிக்காத சாதனையை 11 மருத்துவக் கல்லூரியை தொடங்கி எடப்பாடி பழனிச்சாமி சாதனை செய்துள்ளார். தமிழக மக்கள் ஜெயலலிதா, எம்ஜிஆர் காலத்தில் எப்படி வாழ்ந்தார்களோ அதே போல வாழ எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுப்பார். சினிமா கவர்ச்சிக்கு எப்போதுமே கூட்டம் வரும், அமிதாப் பச்சன் வந்தால் கூட கூட்டம் வரும்.. மக்கள் தீர்மானிக்க வேண்டும், மதுரையில் 200 கோடி மாநகராட்சியில் திமுகவினர் கொள்ளையடித்துள்ளனர்..
இதற்கு தீர்வே இல்லை, மாநகராட்சியில் கவுன்சிலர் கூட்டம் நடைபெறவில்லை, இதுநாள் வரை மக்கள் பிரச்சனை தீராமல் உள்ளது.
மதுரையில் திமுக மாமன்ற உறுப்பினர்களையும் ராஜினாமா செய்ய சொல்லி இருக்கலாம், இந்த ஆட்சி 23 ஆம் புலிகேசி ஆட்சி போல தான் இருக்கிறது, கஞ்சா போதை பொருள் விற்பவர்கள் டோர் டெலிவரி செய்கிறார்கள் Amazon, zomato, SUKHI, போல் ஆகிவிட்டது. தமிழ்நாட்டிற்கு வந்த பாவமாக வட மாநில இளைஞர் இருந்துள்ளார்" இவ்வாறு கூறினார்.
செல்லூர் ராஜூ கடந்த இரண்டு நாள் முன்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது தொகுதியில் அமைச்சர் மூர்த்தி மக்களுக்கு குடை, டிபன் கேரியர் என் என்னென்னவோ கொடுத்து வருகிறார் செல்லூர் ராஜூ சொல்லும் திட்டத்தை செய்யக்கூடாது என அதிகாரிகளுக்கு அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டிருக்கிறார்.. மூர்த்தியைப் போல ஒரு அமைச்சரை பார்த்ததில்லை. பொய்களைக் கூறி மக்களை திரட்டி முதல்வருக்கு கூட்டம் காட்டுகிறார்.
தமிழ்நாட்டில் இளம் விதவைகள் அதிகமாக உள்ளார்கள், என் அண்ணன் ஆட்சிக்கு வந்ததும் உடனே மதுக்கடைகளை மூட உத்தரவிடுவார் என கடந்த தேர்தலில் கனிமொழி பேசினார். பொய்யை சொல்லி ஆட்சிக்கு வந்தனர். இந்த ஆட்சியில் பெண்கள் மாநாடு நடத்தி என்ன செய்யப்போகிறார்கள்? பணத்தை கொடுத்து கூட்டத்தை அழைத்து வந்து போட்டோ ஷூட் எடுப்பார்கள் அவ்வளவுதான்.
அதிமுக களத்தில் இல்லாத கட்சி என தவெக தலைவரும் நிர்வாகிகளும் பேசுகிறார்களே என்று கேட்கிறீர்கள்.. நாங்கள் களத்தில் இருக்கிறமோ இல்லையா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். நேற்று வந்த விஜய்க்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம். விஜய் நடிகர் என்பதால் கூட்டம் வருகிறது. மற்ற நடிகரைவிட கொஞ்சம் கூடுதலாக கூட்டம் வருது. இவரை விட நடிகர் வடிவேலு, நடிகை நயன்தாரா வந்தாலும் கூட்டம் கூடும், நடிகருக்கு கூட்டம் கூடத்தான் செய்யும்..
எம்ஜிஆர் ரத்தத்தை வியர்வையாக்கி உழைத்து கிடைத்த பணத்தில் மக்களுக்கு நல்லது செய்தார். எம்ஜிஆர் திமுக-வில் சேர்ந்து உழைத்த பின்புதான் திமுக ஆட்சிக்கு வந்தது, படிப்படியாக எம்ஜிஆர் வளர்ந்தார், ஆட்சியைப் பிடித்தபோது எனக்கு சூடும் வெற்றி மாலை ராமச்சந்திரனுக்கு உரியது என அண்ணா பேசினார். அப்படி படுத்துக்கொண்டே ஜெயிக்க வைத்தவர் எம்ஜிஆர்.
அதுபோல விஜய் ஆதரவு கொடுத்துள்ளாரா? இவர் ஆதரவால் வெற்றி பெற்றவர்கள் உள்ளார்களா? நான் விஜய் பற்றிப் பேசினால் அதிகமான விமர்சனம் ஏற்படும். கூட்டணி பற்றி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக தெரிவித்துள்ளார். கூட்டணி என்பது தேர்தலில் பார்ட்னர், வாக்குகள் சிதறக் கூடாது என்பதற்காக கூட்டணி. கொள்கை கூட்டணி கிடையாது" இவ்வாறு கூறினார்..
-
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி












Click it and Unblock the Notifications