திமுகவில் புதிதாக 2 அணிகள் உருவாக்கம்.. பொதுக்குழுவில் அறிவிப்பு! அணிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்வு!
மதுரை: திமுகவில் புதிதாக 2 சார்பு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. திமுகவில் பேராசிரியர்கள், ஆசிரியர்களை கொண்ட கல்வியாளர் அணி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல, திமுகவில் மாற்றுத்திறனாளிகள் அணி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
திமுகவில் அமைப்பு ரீதியாக ஏற்கனவே 23 அணிகள் உள்ள நிலையில் மேலும் புதிதாக 2 அணிகள் உருவாக்கப்பட்டு இன்று மதுரையில் நடைபெற்று வரும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் திமுகவில் அமைப்பு ரீதியாக உள்ள அணிகளின் எண்ணிக்கை 23ல் இருந்து 25 ஆக உயர்ந்துள்ளது.

மதுரையில் திமுகவின் பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில், 6,500 பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்தி நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
மதுரை உத்தங்குடியில் 90 ஏக்கர் பரப்பளவில், சென்னை அண்ணா அறிவாலயம் போன்ற முகப்பு தோற்றத்துடன் பொதுக்குழு நடைபெறும் அரங்கின் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. 100 அடி உயரத்தில் கொடிக்கம்பமும் நிறுவப்பட்டு, வண்ணமலர்களுடன் செயற்கை நீரூற்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க பொதுக்குழு கூட்டம் இன்று தொடங்கியது. முன்னதாக சுற்றுலா மாளிகையில் இருந்து வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுக்குழு விழா மேடையில் வைக்கப்பட்டுள்ள பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி, அன்பழகன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதைத்தொடர்ந்து, மறைந்த தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இரங்கல் தீர்மானங்களைத் தொடர்ந்து, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து, திமுகவில் புதிய சார்பு அணிகள் உருவாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுகவில் பேராசிரியர்கள், ஆசிரியர்களை கொண்ட கல்வியாளர் அணி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல, திமுகவில் மாற்றுத்திறனாளிகள் அணி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் திமுகவில் அமைப்பு ரீதியாக உள்ள அணிகளின் எண்ணிக்கை 23ல் இருந்து 25 ஆக உயர்ந்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications