ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாரா? ரவிச்சந்திரகுமாரா? கன்பியூஸ் ஆன எடப்பாடி
மதுரை: தேனி மக்களவை தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் பழனிச்சாமி, அதிமுக வேட்பாளரான ஓபிஎஸ் மகனின் பெயரை மாற்றி உச்சரித்ததால் கூட்டத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டத்தில் இருந்து அதிமுகவினர் சிலர் ஓட்டுக் கேட்க வரும் போது பேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்களை மாற்றி கூறி வருகிறார்கள்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், திண்டுக்கல் தொகுதி பாமக வேட்பாளரை ஆதரித்து ஓட்டுக்கேட்ட போது மாம்பழத்துக்கு பதிலாக ஆப்பிளுக்கு ஓட்டுப்போடுமாறு கேட்டு அதிரவைத்தார். ஒருமுறையல்ல இரண்டு முறை ஆப்பிள் சின்னத்துக்கு ஓட்டு கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் தேனி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் முதல்வர் பழனிச்சாமி நேற்று பிரச்சாரம் செய்தார். தேனியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும், துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்குமாரை ஆதரித்து முதல்வர் பழனிச்சாமி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நேற்று பிரச்சாரம் செய்தார்
அப்போது முதல்வர் பழனிச்சாமி, தேனி மக்களவை தொகுதி வேட்பாளர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் என்பதற்கு பதிலக ஓ.பி.ரவிச்சந்திரகுமார் என பேசினார். இதனை கேட்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனிடையே முதல்வருடன் இருந்த அமைச்சர் உதயக்குமார் தவறாக சொல்வதை அவரிடம் எடுத்துக் சொன்னார்.இதனால் உஷாரான முதல்வர் பழனிச்சாமி, ரவீந்திரநாத்குமார் என்று பெயரை சரியாக சொல்லி அதன் பிறகு வாக்கு கேட்டார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications