எடப்பாடி போட்ட திட்டம்.. தேவர் புகழை கெடுக்க சதி? ஒரே போடாக போட்ட மருது.. ஈபிஎஸ் பிளானுக்கு வேட்டு?
மதுரை : ஓபிஎஸ் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களையும் அனுப்பி தேவர் தங்கக் கவசத்தை பெற முயற்சி மேற்கொள்கிறார். ஆனால், எடப்பாடி பழனிசாமி, 'ஒரே' சமூகத்தவரை அனுப்பி தேவரின் பெருமையைக் கெடுக்க முயற்சிக்கிறார் என ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் வெடி வீசியுள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தங்கக் கவசத்தை பெறுவதில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவருக்கும் இடையே போட்டி நிலவுகிறது. இரு தரப்பும் தங்கக் கவசத்தை பெற முயல்வதால், யாரிடம் ஒப்படைப்பது என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது வங்கி நிர்வாகம்.
இந்நிலையில், முத்துராமலிங்கத் தேவர் நினைவிட நிர்வாகிகளைச் சந்தித்து எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் தங்களுக்கு ஆதரவு கோரினர்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி அனுப்பிய முன்னாள் அமைச்சர்கள் 'ஒரே அடையாளம்' கொண்டவர்கள், தேவர் புகழைக் குறைக்கும் சூழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி ஈடுபடுகிறார் என மருது அழகுராஜ் சாடியுள்ளார்.

தேவர் தங்கக் கவசம்
அதிமுக சார்பாக ஜெயலலிதாவால் கடந்த 2014ஆம் ஆண்டு 13 கிலோ தங்கத்தில் முத்துராமலிங்கத் தேவருக்கு தங்க கவசம் வழங்கப்பட்டது. மதுரையில் இருக்கும் ஒரு வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்க்கும் அந்த தங்க கவசத்தை அதிமுக பொருளாளரான ஓ.பன்னீர்செல்வம் எடுத்து தேவர் குருபூஜை நிர்வாகத்திடம் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தொடர்ந்து, தேவர் தங்க கவசம் ஒவ்வொரு ஆண்டும் ஓ.பன்னீர்செல்வத்தால் அதிமுக சார்பாக எடுத்து கொடுக்கப்படும்.

ஓபிஎஸ் - ஈபிஎஸ் போட்டா போட்டி
தற்போது அதிமுகவில் நிலவிவரும் மோதல் காரணமாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே இந்த ஆண்டு தங்க கவசத்தை யார் எடுத்துக் கொடுப்பது என்ற பிரச்சனை உருவெடுத்துள்ளது. ஓபிஎஸ் அணி சார்பாக இந்த வங்கிக்கு நேரடியாக வந்து ஆதரவாளர்கள் தங்களுக்கு வழங்க வேண்டும் என்று மனு அளித்திருந்தார்கள். அதேபோன்று ஈபிஎஸ் சார்பாகவும் கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜு உள்ளிட்டோர் வங்கியில் மனு அளித்தனர்.

வங்கி நிர்வாகம் குழப்பம்
ஓபிஎஸ் - ஈபிஎஸ் இரு தரப்பின் மனுக்களையும் வங்கி நிர்வாகம் பரிசீலித்து வரும் நிலையில், யாரிடம் தங்கக் கவசம் ஒப்படைக்கப்படும் என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று திடீரென எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் 7 முன்னாள் அமைச்சர்கள் நேரடியாக பசும்பொன் சென்று தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜனிடம் தங்களுக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் வழங்க வேண்டும் என்று கோரி ஆதரவு கோரினர்.

இரு தரப்பும் முட்டல்
இந்நிலையில் இன்று ஓபிஎஸ் அணியின் சார்பாக முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன், ராஜ்யசபா எம்.பி தர்மர், மருது அழகுராஜ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் வங்கிக்கு சென்று பேசினர். இருதரப்பும் தங்க கவசத்தை பெற முட்டி மோதி வருவதால், வங்கி நிர்வாகம் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது. 2017 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்பில் தங்கக் கவசம் வழங்கப்பட்டது போல இந்த முறையும் முடிவெடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எஃகு கோட்டையை சுக்கு சுக்காக
இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளரான அதிமுக செய்தித் தொடர்பாளராக இருந்த மருது அழகுராஜ் வீசியுள்ள வெடி, எடப்பாடி பழனிசாமி தரப்பை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தனது அரசியல் அபகரிப்புக்காக எஃகு கோட்டையாக திகழ்ந்த அதிமுகவை சுக்குச் சுக்காக நொறுக்க முயற்சிக்கும் இடி அமீன் எடப்பாடி அடுத்ததாக அக்டோபர் 30 தேவர் குருபூஜையை முன் வைத்து முக்குலத்து சமுதாயத்திடமும் குறிப்பாக அப்பழுக்கற்ற தேசியத் தலைவர் பசும்பொன் தேவர் திருமகனாரை உளமார வணங்கும் சமூகங்களிடையேயும் மோதலையும் பிளவையும் உருவாக்க பார்க்கிறார்.

நரி சூழ்ச்சி
ஜெயலலிதா, பசும்பொன் திருமகனாருக்கு அதிமுக சார்பில் ஆண்டுதோறும் குருபூஜை திருநாளில் அணிவிப்பதற்காக வழங்கிய தங்க கவசத்தை இன்று வரை தேர்தல் ஆணைய பதிவுகளில் அதிமுகவின் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளராகவும் பொருளாளராகவும் இருந்து வரும் ஓ.பன்னீர்செல்வத்துக்கே அந்த உரிமை இருந்து வரும் நிலையில் அத்துமீறி ஜனநாயகத்திற்கு புறம்பாக தான் நியமித்திருக்கும் தனது முகவர்களிடமும் முட்டுத்தாங்கிகளிடமும் முத்துராமலிங்கத் தேவருக்கான தங்க கவசம் அணிவிக்கும் பொறுப்பை தர வேண்டும் என எடப்பாடியின் ஏவல் ஆட்கள் முரண்டு பிடித்து வருவது குருபூஜை நிகழ்வின் புனிதத்தையும் அமைதியையும் திட்டமிட்டு கெடுக்க முயற்சிக்கும் நரி சூழ்ச்சியாகும்.

‘சகல’ சமூகத்தவரும்
இதனை தான் வாழும் காலமெல்லாம் துரோகத்தை சாடிய பசும்பொன் ஐயாவின் ஆன்மாவும் ஏற்காது. மேலும் தங்க கவச உரிமை குறித்து தங்கள் தரப்பு நியாயத்தை நிலைநாட்ட முன்னாள் மக்களவை உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் சையது கான் மற்றும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினர் தருமர் என சகல சமூகங்கள் சார்ந்தவர்களையும் கொண்டு உரிய முன்னெடுப்புகளை ஓ.பி.எஸ் மேற்கொண்டு வருகிறார்.

ஒரே அடையாளம்
ஆனால், எடப்பாடியோ திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, ஓ.எஸ்.மணியன், ராஜன் செல்லப்பா என ஒரே அடையாளத்திலான ஆட்களை அனுப்பி எக்குலமும் ஏற்றுப் போற்றுகிற விடுதலைப் போராட்ட தியாகத் திருமகனாரின் விரிந்து பரந்த புகழின் மீது ஒரு குறுகிய நிழலை படர வைக்க எடப்பாடி மேற்கொண்ட சூழ்ச்சியே இது என்பதை தேவரய்யாவின் திருவடியையும் அவர்தம் திருத்தலத்தின் திருநீரையும் பூசித்தும் யாசித்தும் வாழும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒற்றுமையை குலைக்க
எனவே, எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் உயிராக வளர்த்த இயக்கத்தை பூகோள ரீதியாகவும் மண்டலங்களாகவும் உடைத்து வரும் எடப்பாடி அக்டோபர் 30 குருபூஜை வழிபாட்டு வைபவத்தையும் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் பிளவுக்கான களமாக மாற்ற முயற்சிப்பதை ஐயா தேவர் திருமகனாரை நேசிக்கும் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே அனைவரது வேண்டுகோள்" எனத் தெரிவித்துள்ளார்.

திட்டம் பனால்?
தேவர் குருபூஜைக்கு தனது சார்பில் தங்கக் கவசத்தைப் பெற்றுக் கொடுத்து, தென் மாவட்டங்கள், முக்குலத்தோர் சமூகத்தவர் மத்தியில் தனது செல்வாக்கை அதிகரிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு வரும் நிலையில், ஈபிஎஸ் அனுப்பிய முன்னாள் அமைச்சர்கள் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக் குறிப்பிட்டு அவர் சாதி ரீதியாக அதிமுகவை பிளவுபடுத்த முயற்சிப்பதாக ஓபிஎஸ் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது எடப்பாடி தரப்புக்கு குடைச்சலாக உருவெடுத்துள்ளது.
-
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
ஸ்டாலின், விஜய் தொகுதிகளை விடுங்க.. ரெக்கார்டு படைக்கும் கரூர்.. தமிழகத்திலேயே அதிக வேட்பாளர்கள்! -
Corona: முதல்வர் ஸ்டாலினே கொரோனாவால் போயிருப்பார்! ஆனால்..! எடப்பாடி பழனிசாமி சர்ச்சை பேச்சு! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
விந்தியா பேசும்போதே குறுக்கே நபர்.. மைக் ரிப்பேர்.. திமுகவையும் திட்டணும்.. கடலூரில் செம டென்ஷன் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு -
ரொம்ப ஓவரா போறீங்கடா.. எடப்பாடி பழனிசாமிக்கு உம்மா கொடுத்த அதிமுக வேட்பாளர் -
கண்டுகொள்ளாத அதிமுக 2ம் கட்ட நிர்வாகிகள்.. கலக்கத்தில் ராம ஸ்ரீனிவாசன்.. கொடி பிடிக்க கூட வரலையாம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications