'இனி இப்படி செய்தால் தப்பவே முடியாது'.. வீடு கட்ட போறீங்களா.. வாங்க போறீங்களா.. ஹைகோர்ட் உத்தரவை பாருங்க
மதுரை: சட்டவிரோதமாகவும், கட்டிட வரைபட அனுமதி இல்லாமலும் கட்டப்படும் கட்டுமானங்களை இடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, விதிமீறல் கட்டிடங்களுக்கு அபராதம் செலுத்தினாலும் கிரிமினல் நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது என தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாகவும், கட்டிட வரைபட அனுமதி இல்லாமலும் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. அப்படி கட்டப்படும் கட்டிடங்களுக்கு மின்சாரம், குடிநீர் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் அளிக்கப்படுகின்றன. அதேபோல் அரசு நிலங்கள், நீர்நிலைகளை ஆக்கிரமித்து மோசடியாக பத்திரப்பதிவு செய்கிறார்கள். அப்படி பத்திரப்பதிவான இடங்களில் வீடுகள் கட்டப்பட்டு, அந்தஇடங்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகின்றன. அதேநேரம் ஒரு கட்டத்தில் பலரும் இந்த தவறுகளை செய்திருக்கும், அதனை முறைப்படுத்தும் அரசு, பட்டா வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கையில் இறங்குகிறது. அதேநேரம் விதிமீறல் கட்டிடங்களை பொறுத்தவரை அபராதம் மட்டும் விதிக்கப்படுகிறது. கட்டிடங்கள் இடிக்கப்படுவது இல்லை.. இதுதான் தமிழகத்தில் தற்போது உள்ள எதார்த்தமான நிலையாகும்.

இந்நிலையில் மதுரையை சேர்ந்த டைட்டஸ் மதன்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது: “மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட விளாங்குடி பகுதியில் அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து சட்டவிரோதமாக வீடுகள் கட்டப்பட்டிருக்கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரை மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் மாநகராட்சி தரப்பில் எடுக்கப்படவில்லை. எனவே, சட்டவிரோத கட்டுமானங்களை இடிக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தி இருந்தார்.
இந்த மனு கடந்த டிசம்பர் 8-ந் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சுப்ரமணியம், லட்சுமி நாராயணன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரையின் பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி, சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மதுரை மாநகராட்சியே துணை போயிருப்பதாக தெரிய வருகிறது. இதனால் பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்றன. இதுதொடர்பாக உரிய காலத்துக்குள் மதுரை மாநகராட்சி பதில் மனுவும் தாக்கல் செய்யவில்லை. எனவே மதுரை மாநகராட்சி கமிஷனர், கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஹைகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு செவ்வாய்கிழமையான நேற்று மீண்டும் நீதிபதிகள் சுப்ரமணியம், லட்சுமி நாராயணன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி கமிஷனர் மதுபாலன் நேரில் ஆஜரானார். நான், பதவியேற்று ஒரு மாதம் மட்டுமே ஆகியிருப்பதால், விரைவில் மாநகராட்சி சார்ந்த வழக்குகளில் பதில் மனு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக நீதிமன்றத்தில் உறுதி அளித்தார். அரசுத்தரப்பில் கூடுதல் தலைமை வக்கீல் வீராகதிரவன் ஆஜராகினார்.
வாதங்கள் முடிந்த பின்னர் நீதிபதிகள் கூறுகையில், "மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாகவும், கட்டிட வரைபட அனுமதி இல்லாமலும் கட்டப்படும் கட்டுமானங்களை ஆய்வு செய்து இடிப்பதற்கான நடவடிக்கைகளை மதுரை மாநகராட்சி எடுக்க வேண்டும். அத்துடன், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின்படி, கிரிமினல் புகார் தர வேண்டும். மாநகராட்சி தரும் புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வசதியாக மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் ஒத்துழைப்புதர வேண்டும்.
தமிழக நகர்ப்புற மற்றும் உள்ளாட்சி சட்டத்தின்படி, விதிமீறல் கட்டிடங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால், அபராதம் செலுத்துவதன் மூலம் கிரிமினல் நடவடிக்கைகளில் இருந்து தப்ப முடியாது. இந்த உத்தரவு அனைத்து உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள விதிமீறல் கட்டிடங்களுக்கும் பொருந்தும்" என்று உத்தரவிட்டுள்ளனர். இனி உயர்நீதிமன்ற உத்தரவு காரணமாக விதிமீறி கட்டிடங்கள் கட்டுவோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க முடியும். கட்டிடங்கள் இடிப்பு மற்றும் சிறை தண்டனை உள்ளிட்ட நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications