இபிஎஸ்க்கு ஏலக்காய் மாலை..ஆர்.பி உதயகுமார் வீட்டு பிரம்மாண்ட கல்யாண விருந்து..படு இனிப்புதான்!
ஆர்.பி உதயகுமார் மகள் திருமண விழாவில் பரிமாறப்பட்ட உணவு வகைகளைப் பற்றி பொதுமக்கள் பலரும் சுவையாக பேசிக்கொண்டனர்.
மதுரை: கல்யாணம் பிரம்மாண்டம் என்றால் கல்யாண விருந்தில் பரிமாறப்பட்ட உணவின் சுவை பல நாட்களுக்கு பேசப்படும் என்று ஆர்.பி. உதயகுமார் மகள் திருமண விழாவில் பங்கேற்ற பொதுமக்கள் சுவைபட பேசிக்கொண்டனர். இரவு ரிசப்சன் முதல் பிற்பகல் உணவு வரைக்கும் பரிமாறப்பட்ட வகைகள் பற்றியும் அந்த உணவின் ருசி பற்றியும் பல்லாயிரக்கணக்கான மக்களும் பேசிக்கொண்டதுதான் இந்த செய்தியின் முக்கிய அம்சம்.
பொதுவாகவே திருமண விழாக்களில் பங்கேற்பவர்கள் மணமக்களை ஆசிர்வாதம் செய்த பின்னர் அடுத்ததாக செல்லும் இடம் டைனிங் டேபிள்தான். என்னென்ன உணவுகள் இருக்கின்றன. அந்த உணவுகளின் சிறப்பம்சம் என்ன என்று கவனித்து சாப்பிடுவார்கள்.

அரசியல்வாதிகள் வீட்டு விஷேசம் அதுவும் முன்னாள் அமைச்சர் தற்போது எம்எல்ஏவாக உள்ள ஆர்.பி.உதயகுமார் மகளுக்கு திருமணம் என்றால் விருந்துக்கு கேட்கவா வேண்டும். பல ஊர் மெச்சும் படி தடபுடல் ஆக நடத்தி காட்டி விட்டார்.
மகளின் திருமணத்திற்காக கடந்த 3 மாதங்களாகவே தயாராகி வந்தார் ஆர்.பி. உதயகுமார். முகூர்த்தக்கால் நடுவது தொடங்கி ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தார். திருமண அழைப்பிதழே பிரம்மாண்டமாக இருந்தது. எல்லோருக்குமே தாம்பாளத்தில் வைத்து வீட்டிற்கு வீடு அழைப்பு விடுத்தார் ஆர்.பி. உதயகுமார்.

ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு மகள் திருமணத்துடன் சேர்த்து 50 ஏழை எளிய மணமக்களுக்கும் ஒரே மாதிரியாக சீர் வரிசை கொடுத்து சமத்துவ சமுதாய திருமணம் விழவாக நடத்தினார்.
பிரம்மாண்ட பந்தல் போட்டு தொகுதி மக்களை மட்டுமல்லாது அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி முன்னாள் அமைச்சர்கள், இன்னாள் எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய கிளை செயலாளர்கள், தொண்டர்கள் வரை வரை லட்சக்கணக்கானோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே டி.குண்ணத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் அனைவரும் அவர்கள் வீட்டு கல்யாணம் போல வீடு வீடாக சென்று 22ஆம் தேதி புதன்கிழமை மாலையே வந்து விடுங்கள். ஆடல் பாடல் பாட்டுக்கச்சேரியுடன் ரிசப்சன் இருக்கிறது. விருந்தில் அவசியம் பங்கேற்க வேண்டும் என்று உரிமையோடு அழைப்பு விடுத்தனர்.
புதன்கிழமை மாலையே ரிசப்சனுக்காக கச்சேரி களைகட்டியது. அனைத்துமே 70, 80,90 கால சினிமாக்களில் இடம்பெற்றிருந்த பாடல்கள் என்பதால் பலரும் ரசித்து கேட்டனர். இரவு விருந்தில் எளிமையாக எல்லோரும் சாப்பிடும் வகையில் இட்லி, பொங்கல், கேசரி என சுடச்சுட பரிமாறப்பட்டது. ஒரு பக்கம் இசை விருந்து மற்றொரு பக்கம் கல்யாண விருந்து என களைகட்டியது. இரவு 11 மணி வரை பொதுமக்கள் சாப்பிட்டு விட்டு வீடு திரும்பினர்.

வியாழக்கிழமை காலை முதலே டி.குண்ணத்தூர் அம்மா கோவில் களைகட்டியது. சாரை சாரையாக மக்கள் படையெடுக்கத் தொடங்கினர். வந்தவர்கள் யாரும் உணவு இல்லாமல் திரும்பி போய்விடக்கூடாது என்று சொல்லி விட்டார் ஆர்.பி உதயகுமார். காலையில் சுவையான அல்வா தொடங்கி இட்லி வடைகறி, பூரி சன்னா மசாலா,ராகி புட்டு, ரவா தோசை, புளிக்குழம்பு, உளுந்த வடை என வகை வகையாக வாழை இலையில் உணவு வகைகள் வரிசை கட்டின.
திருமணத்திற்கு வந்தவர்கள் காலை விருந்தை ஒரு பிடி பிடித்தனர். ருசி சும்மா அள்ளியது என்று ஆளுக்கு ஆள் பேசிக்கொண்டனர். சமையல் எந்த ஊர் என்று ஒருவர் கேட்க நம்ம மதுரைக்காரர்தான் சமையல் என்று பேசிச்கொண்டனர்.
திருமண விழாவிற்கு எடப்பாடி பழனிச்சாமி காரில் வரும் போதே பட்டாசுகள் படபடத்தன. 51 ஜோடிகளுக்கும் தாலி எடுத்துக்கொடுத்து ஆசிர்வாதம் செய்தார் எடப்பாடி பழனிச்சாமி. கையில் வேலும், ஏலக்காய் மாலையும் எடப்பாடி பழனிச்சாமியை அலங்கரித்தன. உச்சநீதிமன்ற தீர்ப்பும் சாதகமாக வரவே அவர் கிளம்பும் வரைக்கும் எல்லோருமே உற்சாகமாக வலம் வந்தனர்.

மதிய விருந்தில் 7 வகை காய்கறிகள் கூட்டு, பொறியல், அவியல் இடம் பெற்றன. காளான் பிரியாணி, வெங்காய தயிர் பச்சடி, வெண்டக்காய் புளி மண்டி, காய்கறி அவியல், உருளை கறி வருவல், சாதம், பரும்பு, சாம்பார், கார குழம்பு, பாசிப்பருப்பு பாயாசம் என சுவையான உணவு வகைகளை வந்திருந்த அனைவருமே ருசித்து சாப்பிட்டனர்.
நேற்றிரவு ரிசப்சன் முதல் இன்று பிற்பகல் வரை சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விருந்து சாப்பிட்டிருப்பார்கள் என்று புள்ளி விபரம் கூறுகிறது. டி.குண்ணத்தூரில் இடம் வாங்கி வீடு கட்டியதோடு அம்மா கோவில் கட்டியதில் இருந்தே கிராம மக்களுக்கு அவ்வப்போது கட்சி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து விருந்து கொடுப்பார் ஆர்.பி. உதயகுமார். மகளுக்கு திருமணம் என்றால் சும்மாவா அதுவும் 50 ஜோடிகளுக்கும் திருமணம் என்பதால் மிகப்பெரிய மாநாடு போல தடபுடலாக நடத்தி முடித்து விட்டார் ஆர்.பி. உதயகுமார். எல்லாமே சைவம்தான் என்றாலும் ருசி நாவை விட்டு அகல சில நாட்கள் ஆகும்தான்.
-
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
Velmurugan: அதிமுகவில் 3 சீட்? பாஜக கூட்டணிக்கு செல்லமாட்டேன்! தவாக வேல்முருகன் உறுதி! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications